Shirdi Sai Trust  

  Spreading the life and teachings of Shri Shirdi Saibaba  
Arathi Sai Satcharita Video Audio Books on Sai Photos Sai Temple List Guide for Sai Mandirs SST,Chennai



© Copyright 2005 to 2017. The contents of this website belong to Shirdi Sai Trust, Chennai and other contributors to this website. These contents may be copied and distributed free of cost to Sai devotees, on non-commercial basis.

  

ஸாயி அஷ்டோத்தரம்

Enter Page No.:


ஸ்ரீ சிர்டீ ஸாயீ அஷ்டோத்தர சத நாமாவளி


1. ஓம் ஸ்ரீ ஸாயீநாதாய நமஹ
2. ஓம் லக்ஷ்மீ நாராயணாய நமஹ
3. ஓம் கிருஷ்ண ராம சிவ மாருத்யாதி ரூபாய நமஹ
4. ஓம் சேஷசாயினே நமஹ
5. ஓம் கோதாவரீ தட சிர்டீ வாஸினே நமஹ
6. ஓம் பக்த ஹ்ருதாலயாய நமஹ
7. ஓம் ஸர்வ ஹ்ருத் வாஸினே நமஹ
8. ஓம் பூதாவாஸாய நமஹ
9. ஓம் பூத பவிஷ்யத் பாவ வர்ஜிதாய நமஹ
10. ஓம் காலாதீதாய நமஹ
11. ஓம் காலாய நமஹ
12. ஓம் கால காலாய நமஹ
13. ஓம் கால தர்ப்ப த3மனாய நமஹ
14. ஓம் ம்ருத்யுஞ்ஜயாய நமஹ
15. ஓம் அமர்த்யாய நமஹ
16. ஓம் மர்த்யாபய ப்ரதாய நமஹ
17. ஓம் ஜீவாதாராய நமஹ
18. ஓம் ஸர்வாதாராய நமஹ
19. ஓம் பக்தாவன ஸமர்த்தாய நமஹ
20. ஓம் பக்தாவன ப்ரதிஜ்ஞாய நமஹ
21. ஓம் அன்ன வஸ்த்ர தாய நமஹ

page 1 of 52





44. ஓம் பக்தாநுக்ரஹ காதராய நமஹ
45. ஓம் சரணாகத வத்ஸலாய நமஹ
46. ஓம் பக்தி சக்தி ப்ரதாய நமஹ
47. ஓம் ஞான வைராக்ய தாய நமஹ
48. ஓம் ப்ரேம ப்ரதாய நமஹ
49. ஓம் ஸம்சய ஹ்ருதய தௌர்பல்ய பாப கர்ம வாஸனா க்ஷய கராய நமஹ
50. ஓம் ஹ்ருதய க்ரந்தி பேதகாய நமஹ
51. ஓம் கர்ம த்வம்ஸினே நமஹ
52. ஓம் சுத்த ஸத்வ ஸ்திதாய நமஹ
53. ஓம் குணாதீத குணாத்மனே நமஹ
54. ஓம் அனந்த கல்யாண குணாய நமஹ
55. ஓம் அமித ப்ராக்ரமாய நமஹ
56. ஓம் ஜயினே நமஹ
57. ஓம் துர்தர்ஷா க்ஷோப்யாய நமஹ
58. ஓம் அபராஜிதாய நமஹ
59. ஓம் த்ரிலோகேஷூ அஸ்கந்தித கதயே நமஹ
60. ஓம் அசக்ய ரஹிதாய நமஹ
61. ஓம் ஸர்வ சக்தி மூர்த்தயே நமஹ
62. ஓம் ஸுரூப சுந்தராய நமஹ
63. ஓம் ஸுலோசனாய நமஹ
64. ஓம் பஹுரூப விச்வ மூர்த்தயே நமஹ
65. ஓம் அரூபா வ்யக்தாய நமஹ

page 3 of 52





88. ஓம் ஸித்த ஸங்கல்பாய நமஹ
89. ஓம் யோகேச்வராய நமஹ
90. ஓம் பகவதே நமஹ
91. ஓம் பக்த வத்ஸலாய நமஹ
92. ஓம் ஸத் புருஷாய நமஹ
93. ஓம் புருஷோத்தமாய நமஹ
94. ஓம் ஸத்ய தத்வ போதகாய நமஹ
95. ஓம் காமாதி ஸர்வ அஞ்ஞான த்வம்ஸினே நமஹ
96. ஓம் அபேதானந்தா நுபவ ப்ரதாய நமஹ
97. ஓம் ஸம ஸர்வமத ஸம்மதாய நமஹ
98. ஓம் ஸ்ரீ தக்ஷிணா மூர்த்தயே நமஹ
99. ஓம் வேங்கடேச ரமணாய நமஹ
100. ஓம் அத்புதானந்த சர்யாய நமஹ
101. ஓம் ப்ரபன்னார்த்தி ஹராய நமஹ
102. ஓம் ஸம்ஸார ஸர்வ துக்க க்ஷயகராய நமஹ
103. ஓம் ஸர்வவித் ஸர்வதோ முகாய நமஹ
104. ஓம் ஸர்வாந்தர் பஹிஸ்திதாய நமஹ
105. ஓம் ஸர்வ மங்கல கராய நமஹ
106. ஓம் ஸர்வாபீஷ்ட ப்ரதாய நமஹ
107. ஓம் ஸமரஸ ஸன்மார்க்க ஸ்தாபனாய நமஹ
108. ஓம் ஸ்ரீ ஸமர்த்த ஸத்குரு ஸாயீநாதாய நமஹ

page 5 of 52



ஸ்ரீ சிர்டீ ஸாயீ அஷ்டோத்தர நாமாவளி விரிவுரை

(நாமங்கள் பதம் பிரிக்கப்பட்டு எளிதாக்கப்பட்டுள்ளன)

1. ஓம் ஸ்ரீ ஸாயீநாதாய நமஹ |

ஸ்ரீ ஸாயீநாதருக்கு நமஸ்காரம்.

நாதன் = தலைவன், அரசன், கணவன், முனிவன், குரு, இறைவன்.

இந்த நாமம் ஸ்ரீஸாயீ ஸஹஸ்ர நாமாவளியில் 971 ஆவது நாமம்.

இந்த அற்புதமான நாமம் சம்பந்தமாக பாபா ஒரு பிரகடனமே செய்திருக்கிறார். அது என்னவென்று பார்ப்போமா?

""ஸாயீ, ஸாயீ என்று எந்நேரமும் ஜபம் செய்துகொண் டிருப்பீர்களானால், நான் என்னுடைய அருளால் உங்களுக்கு ஏழு கடல்களையும் அளிப்பேன். (ஏழு கடல்களுக்கப்பாலும் வந்து உங்களைக் காப்பாற்றுவேன்). எவர்கள் என்னுடைய இவ்வார்த்தைகளில் விசுவாசம் வைக்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக நல்வாழ்வு பெறுவார்கள். -- 12

""எனக்கு அஷ்டோபசார பூஜையோ ஷோடசோபசார பூஜையோ வேண்டா. எங்கு பா(யக்ஷிபு)வம் இருக்கிறதோ அங்கு நான் இருக்கிறேன்.'' -- 13

ஸ்ரீமத் ஸாயீராமாயணம் -- அத்தியாயம் 13 -- சுலோகங்கள் 12 & 13.

முதன் முறையாக பாபாவை ஸாயி என்று அழைத்தவர் மஹால்ஸாபதி என்னும் பெயர்கொண்ட பக்தர். ஆரம்பத்திலிருந்து (1872) கடைசிவரை (1918) சுமார் நாற்பத்தாறு ஆண்டுகள் பகலிலும் இரவிலும் பாபாவுடன் கூடவே வாழ்ந்த அணுக்கத் தொண்டர் மஹால்ஸாபதி. அவர் சிர்டீ கிராமத்திலேயே பிறந்த பொற்கொல்லர்; ஏழை. பூஜ்யஸ்ரீ நரஸிம்ஹ ஸ்வாமிஜி, பாபாவின் பக்தர்களின் வரிசையில் மஹால்ஸாபதியையே முதலிடத்தில் வைக்கிறார். மெத்தப் படித்தவர்களும் கனதனவான்களும் சட்டசபை உறுப்பினர்களும் தொழில திபர்களும் வக்கீல்களும் டாக்டர்களும் அரசியல்வாதிகளும் இன்னும் எத்தனையோ பிரபலமானவர்களும் பக்தர்களாக இருந்தபோதிலும், அந்த ஏழைப் பொற்கொல்லருக்கே முதலிடம் என்கிறார் ஸ்வாமிஜி. சரணாகதி மஹிமை!

1872 ஆம் ஆண்டு, சாந்த்பாய் படேலின் கல்யாண கோஷ்டியுடன் பாபாவும் வந்தபோது, ஊர் எல்லையில் நுழைந்தபோதே, ""யா ஸாயி!'' (ஸாதுவே வருக!) என்று சொல்லி பாபாவை வரவேற்றார் மஹால்ஸாபதி.


page 6 of 52



வட இந்தியாவில் பிரசித்தியாகப் புழங்கும் "ஸாஈ' என்னும் சொல், ஸ்வாமி என்னும் ஸம்ஸ்கிருதச் சொல்லின் சிதைவு/திரிபு என்பது மொழியாராய்ச்சியாளர் களின் கருத்தாகும். தமிழ்நாட்டில், ஸ்வாமி சாமியாகத் திரிந்தது போலும்!

ஒப்பு நோக்குக :-

சாதகர்களைப் பிரவர்த்தகர், சாதகர், சித்தர், சித்தரில் சித்தர் என்று கர்த்தாபஜாக்கள் பிரிக்கின்றனர். பிரவர்த்தகர்கள் நெற்றியில் திலகமும் கழுத்தில் மாலையும் அணிவார்கள்; புற ஆசாரங்களைக் கடைப்பிடிப்பார்கள். சாதகர்கள் புற விஷயங்களுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கமாட்டார்கள்; உதாரணமாக பௌல்கள். இறைவன் இருக்கிறார் என்பதில் சரியான நம்பிக்கை உடையவர்கள் சித்தர்கள். ஸ்ரீசைதன்யர் போன்றோர் சித்தரில் சித்தர். இவர்கள் கடவுளைக் கண்டதுமட்டுமல்லாமல் அவருடன் எப்பொழுதும் பேசுகின்றனர்; நெருங்கிப் பழகுகின்றனர். சித்தரில் சித்தரை அவர்கள் ஸாயி என்கின்றனர். ஸாயிக்குமேல் உயர்ந்த நிலை இல்லை.

பகவான் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸரின் அழுதமொழிகள் -- 10.10.1883


2. ஸ்ரீ லக்ஷ்மீநாராயணாய நமஹ |

ஸ்ரீ லக்ஷ்மீநாராயணருக்கு நமஸ்காரம்.

லக்ஷ்மீயை தம் மார்பிலேயே வைத்துக்கொண்டிருக்கிறார் நாராயணர்; இருவரும் பிரிக்கமுடியாதவர்கள். ஒரு மனிதன் தன் மனைவியை எவ்வாறு போற்றிக் காக்க வேண்டும் என்பதை வெளிப்படுத்துவதற்காகவே அவ்வாறு செய்தார் போலும்! இந்த நாமாவிலும் சாமானியனுக்குப் படிப்பினை உண்டு.

பூஜ்யஸ்ரீ நரஸிம்ஹ ஸ்வாமிஜி இல்லறத்தை விடுத்து வெளியேறிவிடுவது என்று முடிவெடுத்த பின்னரும், தாம் ஆரம்பித்த சேலம் லக்ஷ்மீநாராயணர் கோயில் புனருத்தாரண வேலையைப் பூர்த்திசெய்வதற்காகக் கொஞ்சகாலம் குடும்பத்துடன் வாழநேர்ந்தது. இல்லறவாழ்வில் கடைசியாகச் செய்யப்பட்ட தருமகாரியம் இங்கு இரண்டாவது நாமமாகப் பரிணமித்ததோ!

இந்த நாமம் ஸ்ரீஸாயீ ஸஹஸ்ர நாமாவளியில் 815ஆவது நாமம்.


3. க்ருஷ்ண ராம சிவ மாருத்யாதி ரூபாய நமஹ |

கிருஷ்ணனாகவும் ராமனாகவும் சிவனாகவும் ஹநுமானாகவும் பலப்பல தெய்வங்களின் உருவங்களில் காட்சியளித்தவருக்கு நமஸ்காரம்.

page 7 of 52



தம் பக்தனுக்கு எந்த தெய்வத்தின்மீது அதிகமான ஈர்ப்பு யிருக்கிறது என்பதை அந்தர்ஞானத்தால் தெரிந்துகொண்டு, அந்த தெய்வத்தின் உருவத்தில் காட்சியளித்து பக்தனை ஆட்கொண்ட கருணைக்கடலல்லரோ பாபா! முழு விவரமும் அறிய விரும்புபவர்கள் ஸ்ரீமத் ஸாயீராமாயணத்தில் 12, 29, 31 ஆவது அத்தியாயங்களைப் பாராயணம் செய்யலாம்; அருட்கவி கோவிந்த ரகுநாத தாபோல்கர் அருளியிருக்கும் தேவாமிருதத்தைப் பருகலாம்.


4. ஶேஷ ஶாயினே நமஹ |

அரவணையில் துயில்கொள்பவருக்கு நமஸ்காரம். (அ) ஆதிசேஷனின் மீது பள்ளிகொள்பவருக்கு நமஸ்காரம்.

ஆயிரம் தலைகொண்ட ஆதிசேஷனைப் படுக்கையாகக் கொண்டவர் ஸ்ரீமஹாவிஷ்ணு. பள்ளிகொள்ளும் படுக்கையாகவும், அமரும் சிம்மாசனமாகவும், நடந்தால் குடையாகவும், அவதார காலங்களில் தம்பியாகவும் (லக்ஷ்மணர்) அண்ணனாகவும் (பலராமர்) ஸ்ரீமஹாவிஷ்ணுவிற்கு சேவை செய்பவர் ஆதிசேஷன். "ஆயிரம் தலைகள்' என்பது ஓர் உருவகம் எனத் தோன்றுகிறது. யோகசாஸ்திரம், வியாகரணம் (வடமொழி இலக்கணம்), நடன சாஸ்திரம், ஆகியவற்றை அருளிய பதஞ்ஜலி முனிவரும் விசிஷ்டாத்வைத தத்துவத்தை (வைணவம்) அருளிய ஸ்ரீராமாநுஜரும் ஆதிசேஷனின் அம்ச அவதாரங்கள்!


5. கோதாவரீ தட சீர்டி வாஸினே நமஹ |

(புண்ணிய நதியான) கோதாவரியின் கரையில் சீர்டியில் வசிப்பவருக்கு நமஸ்காரம்.

தாம் கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் வசித்ததால் சிர்டீயைப் புனிதத் தலமாக்கினார் பாபா; இது சரித்திரம். இக் கருத்து ஸஹஸ்ர நாமாவளியின் கடைசி நாமத்தில் அழகாக வெளிப்பட்டிருக்கிறது. விரிவாகப் பார்ப்போம்.

ஆயிரமாவது நாமம் -- க்ஷேத்ரீ க்ருத ஸ்வ ஶார்டிகாய நமஹ

தம்முடைய (குக்கிராமம்) சீர்டியைப் புனிதத் தலமாக ஆக்கியவருக்கு நமஸ்காரம் என்பது பொருள்.

சிர்டீ ஓர் அமைதியும் எளிமையும் நிரம்பிய, தூங்கிவழியும் குக்கிராமமாக இருந்தபோதே பாபா திருவாய்மொழிந்தார், "இக் கிராமத்தில்


page 8 of 52



மாடமாளிகைகளும் கூடகோபுரங்களும் எழும்; கனதனவான்கள் திரள்வர்; வாணவேடிக்கைகள் முழங்கும்; தேர்கள், குதிரைகள், யானைகள் அனைத்தும் வரும்; பிரம்மாண்டமான ஊர்வலங்கள் நடைபெறும்.''

Baba's Charters and Sayings. -- 360.

இவையனைத்தும் சொல்லுக்குச் சொல் உண்மையாகிவிட்டன! ஸ்ரீராமநவமித் திருவிழா நடக்கும்போது சிர்டீ சென்று பாரீர்!


6. பக்த ஹ்ருத் ஆலயாய நமஹ |

அடியவர்களின் இதயத்தை ஆலயமாகக் கொண்டவருக்கு நமஸ்காரம்.
ஒப்பு நோக்குக :-

1. நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க

இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க...

முதலிரண்டு வரிகள் -- சிவபுராணம் -- மாணிக்கவாசகர்.

2. பக்த ஹ்ருத் பத்ம வாஸினே நமஹ | - நாமம்.

பக்தர்களின் இதயகமலத்தில் குடிகொண்டவருக்கு நமஸ்காரம் என்பது பொருள்.

பக்தன் இடமளித்தால் அவர் உட்கார்ந்துவிடுவார்; இதில் அணுவளவும் ஐயமில்லை. இடமளிப்பது நம்முடைய பொறுப்பு! வலிய வந்து உட்காரும் பழக்கமும் உண்டு; அது ருணானுபந்தம் (பூர்வஜன்ம பந்தம்)!

ஸ்ரீ சிர்டீ ஸாயீ ஸஹஸ்ர நாம விரிவுரை - நாமம் 661.


7. ஸர்வ ஹ்ருத் வாஸினே நமஹ |

எல்லா உயிர்களின் இதயத்திலும் வசிப்பவருக்கு நமஸ்காரம்.

இதற்கு இணையாக ஸஹஸ்ர நாமாவளியின் 936ஆவது நாமம் அமைந்திருக்கிறது. உட்புகுந்து பார்ப்போமா?

ஸர்வ பூத ஆஶய ஸ்திதாய நமஹ - நாமம்.

அனைத்துப் பிராணிகளின் இதயத்திலும் உறைபவருக்கு நமஸ்காரம் என்பது பொருள்.


page 9 of 52



ஆஶய = The heart,

ஒப்பு நோக்குக :-

அஹமாத்மா குடாகேச ஸர்வபூதா சயஸ்தித:

அஹமாதிஸ்ச மத்யம் ச பூதானா மந்த ஏவ ச || -- 10.20

விழிப்புடையோய், எல்லா உயிர்களின் உள்ளத்து உறையும் ஆத்மா நானே. உயிர்களின் ஆதியும் இடையும் இறுதியும் நானே. -- பொழிப்புரை

குடாகேசன் என்றால் தூக்கத்தை வென்றவன் அல்லது அடர்ந்த கூந்தலையுடையவன் என்று பொருள். தூக்கத்தை வென்று, ஆன்மபோதத்தில் விழிப்பு அடையப் பெறுபவர்க்கே பரமாத்மாவின் வியாபகம் விளங்கும். உயிர்கள் தோன்றுவதும் நிலைபெற்றிருப்பதும் ஒடுங்குவதும் பரமாத்மாவினி

டத்திலேயாம். -- விரிவுரை. ஸ்ரீமத் பகவத்கீதை பாஷ்யம் -- அத்தியாயம் 10 -- சுலோகம் 20 -- பூஜ்யஸ்ரீ ஸ்வாமி சித்பவானந்தர்.


8. பூத ஆவாஸாய நமஹ |

பஞ்சபூதங்களிலும் (நீர், நிலம், நெருப்பு, காற்று, விண்வெளி) வசிப்பவருக்கு நமஸ்காரம்.

9. பூத பவிஷ்யத் பாவ வர்ஜிதாய நமஹ

கடந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் என்றேது மில்லாதவருக்கு நமஸ்காரம்.

பாபா காலாதீதர் (காலத்தைக் கடந்தவர்) என்பது பொருள்.அதுவே அடுத்த நாமமாகப் பரிணமித்திருக்கிறது.


10. கால அதீதாய நமஹ |

காலத்தைக் கடந்தவருக்கு நமஸ்காரம்.

இறைவனுக்கு மஹாகாலம் என்பது ஒரு பெயர். அகண்டாகார கால சொரூபமாக யிருந்து அவன் அண்டங்கள் யாவையும் விழுங்கிக்கொண் டிருக்கிறான்.


page 10 of 52




ஒப்பு நோக்குக :-

மேலை வானவரும் அறியாதது ஓர்

கோலமே எனை ஆட்கொண்ட கூத்தனே

ஞாலமே விசும்பே இவை வந்து போம்

காலமே உனை என்று கொல் காண்பதே, -- திருவாசகம்.

ஞாலம் = பூமி, விசும்பு = வானம்.

மேலோராகிய தேவர்களுக்கும் காட்சிக்கு எட்டாத திருவுருவத்தை உடைய நடராஜப் பெருமானே, நீ என்னை ஆட்கொண்டுள்ளாய். பிரபஞ்சத்தின் தோற்றத்திற்கும் ஒடுக்கத்திற்கும் சாட்சியாயிருக்கும் காலத்தைக் கடந்தவன், கால சொரூபம் நீ. உன்னை நான் எப்பொழுது காண்பேன்? -- தெளிவுரை.


11. காலாய நமஹ |

காலதேவனுக்கு (அ) மரணதேவனுக்கு நமஸ்காரம்.

இவ்விடத்தில், காலத்தை ஆள்பவர் என்று பொருள்கொள்வது சிறப்பு.


12. கால காலாய நமஹ |

மரணதேவனுக்கு மரணதேவன் (யமனுக்கு யமன்) ஆகியவருக்கு நமஸ்காரம்.

பக்தன் மார்க்கண்டேயனின் பொருட்டு யமனுக்கு யமனானார் சிவபெருமான். நாகைப்பட்டினம் மாவட்டத்தில் யிருக்கும் திருக்கடவூர் என்னும் க்ஷேத்திரத்தில் இந்த சம்பவம் நடந்ததாகப் புராண வரலாறு.

இந்த நாமம் ஸ்ரீஸாயீ ஸஹஸ்ர நாமாவளியில் 255ஆவது நாமம்.


13. கால தர்ப்ப தமனாய நமஹ |

யமனின் கர்வத்தை அடக்கியவருக்கு நமஸ்காரம்.

யமதூதர்களை விரட்டியடித்துவிட்டு, பக்தனை மரணத்திலிருந்து பாபா காப்பாற்றியதாகச் சில நிகழ்வுகள் உண்டு. இவற்றை பக்தர்களின் அநுபவங்கள் என்னும் நூலிலும் ஸ்ரீஸாயீ ஸஹஸ்ர நாமாவளியிலும் நமக்கு அளித்திருக்கிறார் பூஜ்யஸ்ரீ நரஸிம்ஹ ஸ்வாமிஜி. இது திருமயிலை குருவின் சிறப்பு!



page 11 of 52




அருட்கவி தாபோல்கர் தம்முடைய அநுபவங்களை ஸ்ரீ ஸாயீ ஸத் சரித்திரமாக (தமிழில் இது ஸ்ரீமத் ஸாயீராமாயணம்) இயற்றினார். சமகாலத்தில் வாழ்ந்த போதிலும் பாபாவை பூதவுடலில் தரிசிக்கும் வாய்ப்புக் கிட்டாத ஸ்வாமிஜி, சமகால பக்தர்களின் அநுபவங்களை அவர்களைச் சொல்ல வைத்துக் கேட்டு, பதிவு செய்து, அலசி, சலித்து, ஆராய்ந்து (படிப்பாலும் பயிற்சியாலும், செய்த தொழிலாலும் வக்கீல் அல்லரோ!) பிற்கால பக்தர்கள் பலனடையவேண்டும் என்னும் பெருநோக்கில் ஒன்றுக்கும் மேற்பட்ட நூல்களை அருளியிருக்கிறார்.

மனிதனின் பார்வைக்கு இரண்டு கண்களும் தேவை. ஒரு கண்ணால் பார்த்தால் முழுக்காட்சி தெளிவாகக் கிடைக்காது. அதுபோலவே, பாபாவென்னும் அவதார புருஷரைப் புரிந்துகொள்ள அருட்கவி தாபோல்கரின் நூலும் தேவை, திருமயிலை குருவின் நூல்களும் தேவை.

| ஜய் ஸ்ரீ நரஸிம்ஹ ஸ்வாமிஜிகீ ஜய் |

ஸ்ரீஸாயீ ஸஹஸ்ர நாமாவளி நாமங்கள் 259, 768, 769 விளக்கங்கள் காண்க. பாபா, யமதூதர்களை விரட்டியடித்த விவரம் அங்குண்டு.


14. ம்ருத்யுஞ்ஜயாய நமஹ |

மரணதேவனான யமனை வென்ற சிவனுக்கு நமஸ்காரம்.

காலனைக் காலால் உதைத்துத் தள்ளி வென்றவர் முக்கண்ணனாகிய சிவபெருமான்.

கிருஷ்ண யஜுர்வேதத்தின் இதயபாகமான ஸ்ரீருத்ரத்தில் அமைந்திருக்கும் சிறப்பான சில நாமங்களில் ஒன்று "ம்ருத்யுஞ்ஜயாய நமஹ'. கடுமையான நோயிலிருந்து விடுபட, இல்லத்தில் ம்ருத்யுஞ்ஜய ஹோமம் செய்யும் வழக்கம் பாரததேசம் முழுவதிலும் உண்டு. பொதுவாகவே, நோயற்று வாழ்வதற்கும் ஆயுளை விருத்தி செய்துகொள்வதற்கும், பிறந்தநாளன்று ஒவ்வொரு வருடமும் இல்லத்தில் ம்ருத்யுஞ்ஜய ஹோமம் செய்வது சிறப்பு. செலவு அதிகம் செய்யவேண்டியதில்லை. ஹோம திரவியங்களும் திறமையுள்ள வைதீகர் ஒருவரும் நம்பிக்கையும் இருந்தாற் போதுமானது!

நாமம் 12 சம்பந்தப்பட்டது.



page 12 of 52



15. அமர்த்யாய நமஹ |

மரணமென்பது இல்லாதவருக்கு நமஸ்காரம்.

அவதார புருஷர்களுக்கு மரணமேது? மனித குலத்தை உய்விப்பதற்காகத் தோன்றுகின்றனர்; வேலை முடிந்தவுடன் திரும்பிவிடுகின்றனர். இது சம்பந்தமாக ஸாயீயின் திருவாய்மொழி ஒன்றைப் பார்ப்போம்.

"நான் எங்கும் இருக்கிறேன் -- நீரிலும் நிலத்திலும் காய்ந்துபோன கொம்பிலும் மனிதர்களிடையேயும் வனத்திலும் இந்த தேசத்திலும் வெளிதேசங்களிலும் -- எங்கும் இருக்கிறேன். நான் எந்த தேசத்தின் எல்லைகளுக்கும் உட்பட்டவன் அல்லேன். ஒளியுடைய ஆகாயத்திலும் நான் வியாபித்திருக்கிறேன். -- 212.

"மூன்றரை முழம் உயரமுள்ள இம் மனிதக்கூட்டில்தான் நான் வியாபித்திருக்கிறேன் என்ற தவறான அபிப்பிராயத்தை அகற்றுவதற்காகவே நான் இப் புவியில் அவதரித்திருக்கிறேன். -- 213

"என்னை வேறொன்றிலும் நாட்டமில்லாமலும் பிரதிபலன் ஏதும் எதிர்பாராமலும் இரவுபகலாகத் தொழுபவன் இரண்டென்னும் மாயையை வென்று என்னுடன் ஐக்கியமாகிவிடுகிறான். -- 214

"வெல்லத்தை விட்டு இனிப்பு வெளியே சென்றுவிடலாம். கடல், அலைகளைப் பிரிந்துவிடலாம். கண், கருமணியைப் பிரியலாம். என் கபடமற்ற, விசுவாசமுள்ள பக்தன் என்னிலிருந்து வேறுபடமாட்டான். -- 215

"ஜனனமரணச் சுழலிலிருந்து நிச்சயமாக விடுபடவேண்டுமென்று உறுதியாக நினைப்பவன், தர்மசாஸ்திர விதிகளின்படி வாழ்க்கை நடத்தப் பிரயத்தனம் செய்யவேண்டும். எப்பொழுதும் தனக்குள் அடங்கிய மனத்தினனாக இருக்கவேண்டும்.'' -- 216.

ஸ்ரீமத் ஸாயீராமாயணம் -- அத்தியாயம் 19 -- சுலோகங்கள் 212 to 216.


16. மர்த்ய அபய ப்ரதாய நமஹ |

மாண்டுபோகும் இயல்புடையவர்களுக்குத் (மனிதர்களுக்கு) தஞ்சமளிப்ப வருக்கு நமஸ்காரம்.

page 13 of 52



தமது எல்லையற்ற கருணையால் மிருகங்களுக்கும் தஞ்சமளித்து விடுதலை யளித்திருக்கிறார் பாபா. ஸ்ரீஸாயீ ஸஹஸ்ர நாமாவளி 431இல் விவரம் அறிக!


17. ஜீவாதாராய நமஹ |

உயிர்வாழ்வன அனைத்திற்கும் ஆதாரமானவருக்கு நமஸ்காரம்.

18. ஸர்வாதாராய நமஹ |

பிரபஞ்சத்திலுள்ள, உயிருள்ள உயிரற்ற அசையும் அசையாப் பொருள்கள் அனைத்திற்கும் ஆதாரமானவருக்கு நமஸ்காரம்.

முழுமுதற்பொருள் அதுவாகவே ஏற்றுக்கொண்ட பொறுப்பாகும் இது!


19. பக்த அவன ஸமர்தாய நமஹ |

பக்தர்களைக் காப்பாற்றும் சாமர்த்தியம் உடையவருக்கு நமஸ்காரம்.

ஒப்பு நோக்குக :-

மேலும், அவன் வாழ்க்கை நெறியில் உங்களுக்கு எவ்வித சிரமத்தையும் வைத்திடவில்லை. உங்கள் தந்தை இப்ராஹீமின் மார்க்கத்தில் நிலைத்திருங்கள். அல்லாஹ் உங்களுக்கு "முஸ்லீம்கள்' என்றுதான் முன்பும் பெயர் சூட்டியிருந்தான். இதிலும் (குர்ஆனிலும்) உங்களுக்கு இதே பெயர்தான்! தூதர் உங்கள்மீது சான்று வழங்குபவராகவும் நீங்கள் மக்கள் மீது சான்று வழங்குபவர்களாகவும் திகழவேண்டும் என்பதற்காக! எனவே தொழுகையை நிலைநாட்டுங்கள்; க்ஷிஜகாத் கொடுங்கள். மேலும் அல்லாஹ்வை இறுகப் பற்றிக் கொள்ளுங்கள். அவன்தான் உங்கள் பாதுகாவலன். அவன் எத்துணைச் சிறந்த பாதுகாவலன்; மேலும், அவன் எத்துணைச் சிறந்த உதவியாளன்!

திருக் குர்ஆன் -- அல்ஹஜ் -- அத்தியாயம் 22 -- திருவசனம் 78.

க்ஷிஜகாத் = இறைவழியில் பொருளைச் செலவிடுதல்.

இந்த நாமம் ஸ்ரீஸாயீ ஸஹஸ்ர நாமாவளியில் 655ஆவது நாமம்.


20. பக்த அவன பிரதிஜ்ஞாய நமஹ |

பக்தர்களைக் காப்பது என்னும் பிரமாணம் ஏற்றவருக்கு நமஸ்காரம்.

page 14 of 52



ஒப்பு நோக்குக :-

தான் நாடுவோர்க்கு அல்லாஹ் உதவி செய்கின்றான். மேலும், அவன் வலிமை மிக்கவனாகவும் பெரும் கிருபையாளனாகவும் இருக்கின்றான். இது அல்லாஹ் அளித்த வாக்குறுதியாகும். அல்லாஹ் ஒரு போதும் தன் வாக்குறுதிக்கு மாறு செய்வதில்லை. ஆயினும், மக்களிற் பெரும்பாலோர் அறிவதில்லை.

திருக் குர்ஆன் -- அர்ரூம் -- அத்தியாயம் 30 -- திருவசனங்கள் 4, 5 & 6.

"மக்களிற் பெரும்பாலோர் அறிவதில்லை' என்னும் கூற்று ஸாயி பக்தர்களுக்குப் பொருந்தாது; இது அவர்களுடைய பாக்கியம்.

இந்த நாமம் ஸ்ரீஸாயீ ஸஹஸ்ர நாமாவளியில் 659ஆவது நாமம்.


21. அன்ன வஸ்த்ர தாய நமஹ |

உணவும் உடையும் அளிப்பவருக்கு நமஸ்காரம்.

உணவோடும் உடையோடும் உறைவிடத்தையும் சேர்த்துக்கொள்ளலாம் என்று பாபாவின் புண்ணிய சரித்திரம் கூறுகின்றது.

R.B. புரந்தரே (ரகுவீர் பாஸ்கர் புரந்தரே) என்பவர் பம்பாயில் இருந்த துணிமில் ஒன்றில் மாதம் 35 ரூபாய் சம்பளம் வாங்கிய குமாஸ்தா. சட்டென்று உணர்ச்சி வசப்படக்கூடியவர். பாபா அவரை பக்திமானாக மாற்றினார்; மிக நெருங்கிய பக்தர்களில் ஒருவர் அவர்.

தற்போது மாடமாளிகைகளால் நிரம்பியிருக்கும் "பாந்த்ரா' (யழிஐ க்ஷழி) ஒரு காலத்தில் பொட்டற்காடாக இருந்தது! சொந்தவீடு என்பதைக் கனவிலும் காணமுடியாத இந்தச் சொற்ப சம்பளக்காரரும் பெரிய குடும்பஸ்தருமான பக்தரை, பாந்த்ராவில் நிலம் வாங்கவைத்து ஒரு பெரிய வீடும் கட்டவைத்துவிட்டார் பாபா! பாபாவிடம் வாய்ச்சண்டை போட்டு மல்லுக்கட்டக்கூடிய அளவிற்கு அன்பு செலுத்தினார் புரந்தரே. பாபா சொன்னதை வார்த்தைக்கு வார்த்தை வழுவாமல் பின்பற்றி வாழ்க்கை நடத்தினார். பாபாவிடம் பரிபூரணமாக சரணாகதி அடைந்த சிலரில் இவர் ஒருவர். காலரா, ப்ளேக், மரணபயம் என்பன போன்ற பல நோய்களிலிருந்து புரந்தரேவை பாபா காப்பாற்றினார்.

ஸ்ரீஸாயீ ஸஹஸ்ர நாமாவளியில் 68ஆவது நாம விளக்கமும் காண்க.


page 15 of 52




22. ஆரோக்ய க்ஷேம தாய நமஹ |

நோயற்ற நல்வாழ்வை அளிப்பவருக்கு நமஸ்காரம்.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். Health is Wealth.


23. தன மாங்கல்ய ப்ரதாய நமஹ |

செல்வச் செழுமையையும் மங்களங்களையும் சிறப்பாக அளிப்பவருக்கு நமஸ்காரம்.

24. ருத்தி ஸித்தி தாய நமஹ |

செழிப்பான வாழ்வையும் திட்டமிடுவதை நிறைவேற்றும் ஆற்றலையும் அளிப்பவருக்கு நமஸ்காரம்.

இவையிரண்டும் ஒருசேர ஒரே மனிதரிடம் அமைவது சிறப்பு. ஸாயீ பக்தர்களுக்கு இப் பேறு சுலபமாக அமையும் என்பது உட்கிடை!


25. புத்ர மித்ர களத்ர பந்து தாய நமஹ

மனைவி, மக்கட்செல்வம், உறவினர்கள், நண்பர்கள் ஆகியவர்களை அளிப்பவருக்கு நமஸ்காரம்.

மேலெழுந்தவாரியாகப் பார்த்தால், ஒரு மனிதருக்கு இவ்வுறவுகள் இயல்பாகவே அமைகின்றனவே, இதில் பாபாவின் அருட்கொடைக்கு இடமெங்கு இருக்கிறது என்னும் கேள்வி எழலாம். ஆழமாக நோக்கின் உட்கிடை விளங்கும்.

மனைவி, மக்கள், உறவினர்கள், நண்பர்கள், ஒரே சமூகத்தில் வாழ்பவர்கள் ஆகியோரிடம் எத்தனை மனிதர்களுக்கு சுமுகமான, இனிய, பரஸ்பரம் நன்மை பயக்கக்கூடிய உறவு அமைந்திருக்கிறது என்பது ஒரு மில்லியன் டாலர் கேள்வி! மனோதத்துவ நிபுணர்களும் சமூகவியல் ஆராய்ச்சியாளர்களும் மண்டையைப் பிய்த்துக்கொள்ளும் கேள்வி இது. விடை அவ்வளவு சுலபம் அன்று!

பாபாவின் அருள் இருந்தால் இவ்வுலக உறவுகள் அனைத்தும் சுமுகமாக அமையும் என்பது இந்த நாமத்தின் உட்கிடை. சுமுகம் சுலபமாகிறது!


page 16 of 52




26. யோக க்ஷேம வஹாய நமஹ

(பக்தர்களுக்கு) யோகத்தையும் க்ஷேமத்தையும் வழங்குபவருக்கு நமஸ்காரம்.

"யோகக்ஷேமம் விசாரித்துவிட்டு வந்தேன்' என்று ஒருவர் பேச்சுவழக்கில் சொல்லும்போது நமது மனத்தில் தென்படுவது உலகியல் சமாசாரங்கள்தாமே? ஆகவே, மேலெழுந்தவாரியாகவும் தனிப்படுத்தியும் இந்த நாமத்திற்குப் பொருள் காணும்போது, உலகியல் பொருள்களும் சுகங்களுந்தான் சுட்டப்படுகின்றன என்று தோன்றலாம். ஆனால், அது முழுமையான பொருளுணர்தல் அன்று.

யோகம் என்றால் என்ன? க்ஷேமம் என்றால் என்ன? இவையிரண்டையும் தெளிவாகப் புரிந்துகொள்வது அவசியமாகிறது. நமக்கு வழங்கப்படுபவை என்னென்ன என்பதில் தெளிவு வேண்டாமா? ஸ்ரீகிருஷ்ணரின் திருவாய்மொழி என்னவென்று பார்ப்போம்.

அனன்யாஸ்சிந்தயந்தோ மாம் யே ஜனா: பர்யுபாஸதே

தேஷாம் நித்யாபியுக்தானாம் யோகக்ஷேமம் வஹாம்யஹம் -- 9.22

அன்னியரல்லாராய் என்னையே நினைந்து யாண்டும் என்னையே உபாசிக்கும் நித்திய யோகிகளுடைய யோகக்ஷேமத்தை நான் வழங்குகிறேன்.
-- பொழிப்புரை.

அனன்யம் என்றால் பரமாத்மா தங்களுக்கு அன்னியமானவர் அல்லர் என்று எண்ணுதல், அல்லது அவரைத் தவிர வேறு எதையும் எண்ணாதிருத்தல், யோகம் என்பது வேண்டியதைப் பெறுதல், பின்பு, பெற்றதை வைத்துக் காப்பாற்றுதல் க்ஷேமமாகும்.

கர்ப்பத்திலிருக்கும் சிசு தாய்க்கு அன்னியமான தல்ல; ஆதலால் அதன் போஷணை முழுதும் தாயினிடத்திருந்தே இயல்பாக வருகிறது. பிறந்த பின்பும் தாயைத் தஞ்சமடைந்திருக்குமளவு அவள் உணவைத் தேடிவந்து ஊட்டுகிறாள். அனன்னிய பக்தியில் ஈடுபடுவோர் அடையும் பேறு யாண்டும் அதைவிடப் பெரியது.

பொருளைத் தேடுபவர்க்குப் பொருள் அமையவும், பிறகு அழியவும் செய்கிறது. இறைவனது அருள் ஒன்றையே நாடுபவர்க்கு அழியாத அவனது


page 17 of 52



அருள் சுரக்கிறது. மேலும், உடல்வாழ்க்கைக்கு இன்றியமையாத பொருளின் யோகக்ஷேமமும் இறைவனாலேயே அளிக்கப்படுகிறது. பக்தர்மீது பித்தம் கொண்டுள்ள பகவான் தாயினும் சாலப் பரிந்து அவர்களைப் பராமரித்து வருவதாக வாக்குக் கொடுக்கிறான். அனன்னிய பக்தி பண்ணுபவர்களுடைய பெருவாழ்க்கையே பகவானது பிரமாணிக்கத்துக்குப் பரமசான்றாகிறது. பக்தியின் பெருக்கால் தங்கள் உயிரையே அவர்கள் பொருட்படுத்துவதில்லை. ஆகையால், அவர்களைக் காப்பாற்றும் பொறுப்பு பகவானுடையதாகிறது. -- விரிவுரை.

ஸ்ரீமத் பகவத்கீதை பாஷ்யம் -- அத்தியாயம் 9 -- சுலோகம் 22 -- பூஜ்யஸ்ரீ

ஸ்வாமி சித்பவானந்தர்.

நம்முடைய அன்றாட யதார்த்த வாழ்க்கைநிலைக்கு இறங்கி வருவோமாக! தனிமனித சுதந்திரத்தை, ஒரு பொருளை, சுகத்தை, சொத்தினை, பதவியை, அடைவதற்காகப் பெரும்பாடு படுகிறோம். அடைந்ததைத் தக்கவைத்துக் கொள்வதற்கு அதைவிடப் பாடுபடுகிறோம்! அன்றாட உலகியல் வாழ்வில் இது உள்ளங்கை நெல்லிக்கனி.

பெற்ற நிலையைத் தக்கவைத்துக் கொள்வதற்கு உலகியல் விஷயங்களைவிட ஆன்மீக விஷயங்களில் அதிகமான உழைப்பும் சிரத்தையும் தொடர்முயற்சியும் தேவை என்பது நிதரிசனம். இது சம்பந்தமாக, பூஜ்யஸ்ரீ ஸ்வாமி சித்பவானந்தருக்கு பகவான் ஸ்ரீரமண மஹரிஷியுடன் நேர்ந்த, உபதேசம் போன்ற உரையாடல் ஒன்றை அவருடைய சரித்திரத்தில் கண்டுள்ளவாறு அளிக்க விரும்புகிறேன். பழுத்த ஸாயி பக்தர்கள் இதை பகவான் ஸ்ரீரமண மஹரிஷி, தங்களுக்கே அளித்த உபதேசமாக ஏற்றுக்கொள்ள வாய்ப்புண்டு; ஏற்றுக்கொள்வது சிறப்பு.

திருச்சிராப்பள்ளிக்கு அருகிலுள்ள திருப்பராய்த்துறையில் வாழ்ந்த பூஜ்யஸ்ரீ ஸ்வாமி சித்பவானந்தர் சென்னையிலுள்ள ஸ்ரீராமகிருஷ்ண மடத்திற்குச் சென்ற சந்தர்ப்பங்களிலெல்லாம் திருவண்ணாமலைக்குச் சென்று பகவான் ஸ்ரீரமண மஹரிஷியையும் தரிசனஞ் செய்வார். பகவானும் அவரோடு தனிமையில் அதிக நேரம் பேசுவார். பொதுவாக பகவான் மௌன மாகத்தான் இருப்பார். அவரிடம் பகவான் வெகுநேரம் ஆன்மீக விஷயங்கள் பேசுவது பழக்கம். அது மற்றவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.


page 18 of 52



ஒரு சமயம் பூஜ்யஸ்ரீ ஸ்வாமி சித்பவானந்தர் பகவானைப் பார்த்துக் கேட்டதாவது : ""நீங்கள் மதுரையை விட்டு வெளியேறியபொழுது பெற்றிருந்த மனநிலைக்கும் இன்று நீங்கள் பெற்றுள்ள மனநிலைக்கும் என்ன வேறுபாடு காண்கிறீர்கள்?'' பகவான் பகர்ந்ததாவது : ""நான் மதுரையை விட்டு வெளியேறியபொழுது எந்த மனநிலையைப் பெற்றிருந்தேனோ, அதே மனநிலையில்தான் இப்பொழுதும் இருக்கிறேன்.'' ""அங்ஙனமாயின் நீங்கள் எதற்காக இவ்வளவு காலம் தவம் செய்தீர்கள்?'' என்று ஸ்வாமி சித்பவானந்தர் கேட்டார். அதற்கு பகவான் கூறிய பதில் : ""நான் அன்று பெற்ற மனநிலையில் உறுதிபெற்றிருப்பதற்காகத் தவம் செய்ய வேண்டியிருந்தது. அன்று பெற்றதுதான் முடிந்தநிலை. அதற்குமேல் பெறுவதற்கு ஒன்றுமில்லை''

கடுகைத் துளைத்து எழுகடல் புகுத்திக் குறுகத் தரித்த நாமம் இது!


ஓம் யோகக்ஷேம வஹாய நமஹ

இந்த நாமம் ஸ்ரீஸாயீ ஸஹஸ்ர நாமாவளியில் 781ஆவது நாமம்.

27. ஆபத் பாந்தவாய நமஹ

ஆபத்துக் காலத்தில் துணை நிற்கும் நண்பனுக்கு நமஸ்காரம்.

சற்று விரிவாகவே உட்புகுந்து பார்க்கவேண்டிய நாமம் இது. தீ விபத்திலிருந்து குழந்தையைக் காப்பாற்றினார். பாம்பு கடித்த விஷத்தால் மரணமடையாமல் மாதவராவ் தேச்பாண்டேவைக் காப்பாற்றினார். பாம்பு கடிக்காமல் மிரீகரையும் தாராபாய் தர்கடையும் கோபால்ராவ் புட்டியையும் காப்பாற்றினார். கடும் வெயிலில் மலைப்பிரதேசத்தில் தாஹத்தால் உயிரே போய்விடும் என்ற நிலையில் மாட்டிக்கொண்ட நானா சாந்தோர்க்கருக்கு குடிக்க நீர் தந்து காப்பாற்றினார். கொள்ளைக்காரர்களிடம் மாட்டிக்கொண்ட காசிராம் சிம்பிக்கு, கொள்ளையர்கள் இருவரை வெட்டிச் சாய்க்கும் அளவிற்கு ஆவேசத்தை அளித்துக் காப்பாற்றினார். பாதேவாரின் மனைவியை ரயிலுக்கும் பிளாட்பாரத்திற்கும் நடுவில் தவறி விழுந்தபோது அடிபடாமல் காப்பாற்றினார். தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்து கிணற்றில் குதிக்க ஆயத்தம் செய்துகொண்டிருந்த கோபால் நாராயண் அம்ப்டேகரை மற்றொரு பக்தர்மூலம் குருசரித்திரம் புத்தகத்தைப் படிக்கவைத்து தற்கொலை எண்ணத்தையே கைவிடும்படி செய்தார். மற்றொரு பக்தர் காமத்தால் பீடிக்கப்பட்டு தாசி வீட்டில்


page 19 of 52



உட்கார்ந்துகொண் டிருந்தபோது அவர் எதிரில் தோன்றி, ""இதற்குத்தானா சிர்டீக்கு வந்தாய்?'' என்று கேட்டு அவரைப் பாவ சம்பவத்திலிருந்து காப்பாற்றினார். பூர்வஜன்ம வாக்கைக் காப்பாற்றும் வகையில், பாம்பின் வாய்ப் பிடியிலிருந்து ஒரு தவளையைக் காப்பாற்றினார். ஒரு புலியை அதனுடைய உரிமையாளர்கள் செய்த ஹிம்ஸைகளிலிருந்து காப்பாற்றி மோக்ஷமளித்தார். இவ்வாறு பல நிகழ்ச்சிகள்; இவையனைத்தும் புண்ணிய சரித்திரத்தில் இடம் பெற்றவை. இடம் பெறாத நிகழ்ச்சிகள் எத்தனை எத்தனையோ!

ஆபத்து வந்தபின்தான் காப்பாற்றுவாரா? ஆபத்தே வாராமல் காப்பாற்ற மாட்டாரா? இக் கேள்வி எழும்! சிர்டீயின் பேரருளாளர் இரண்டு வகையிலும் அருள்பாலித்திருக்கிறார் என்பது அவருடைய சரித்திரத்தை பக்தியுடன் ஊன்றிப் படித்தால் விளங்கும். ஆபத்து உருவானபோது அது விபத்தாக விளையாமலும், விபத்தே நேர்ந்துவிட்டபோது அதனால் பொருட்சேதமோ உயிர்ச்சேதமோ ஏற்படாது காத்தருளிய பாபா, ஆபத்தே உருவாகாத வழியில் பல பக்தர்களுக்கு தினசரி அலுவல்களிலும் செயல்பாடுகளிலும் அறிவுரை வழங்கினார். ஏன், எதற்கு, என்று கேட்காமல் அறிவுரையை ஏற்றுக்கொண்டு அதன்படி நடந்தவர்கள் ஆபத்தான சூழ்நிலையைத் தவிர்த்தார்கள். தட்டுத்தடங்கல்கள் ஏதுமின்றி வெற்றிமேல் வெற்றியாக சௌக்கியமாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்தார்கள்; சிலர் மரணத்தையும் மனச்சாந்தியுடன் ஏற்றார்கள். எத்தனையோ பக்தர்கள் பாபாவின் அறிவுரைகளால் நன்மையடைந்தனர். அவர்களுள் தனிப்படுத்திச் சொல்லக்கூடிய அளவிற்கு நன்மையடைந்தவர் பாயஜாபாயியின் புத்திரர் தாத்யா கணபதி கோதே பாடீல், திருவிழா, கோயில்கள் புனருத்தாரணம் போன்ற சமூக சம்பந்தமான பணிகளில் பாபாவுக்கு வலக்கையாகச் செயல்பட்டவர். அவருடைய சமாதி லேண்டித் தோட்டத்தில் அமைந்திருக்கிறது.

பாபா அவ்வப்போது வெவ்வேறு பக்தர்களுக்கு அளித்த அறிவுரைகள் அமிருதத்திற்கு நிகரானவை. சரித்திரத்தில் பொறிக்கப்பட்டிருக்கும் பொன்னான அறிவுரைகளில் சிலவற்றைப் பார்ப்போம்.

1. இன்று நீ சந்தைக்குப் போகவேண்டா. அத்தியாவசியமாக இருந்தால் நேரம் கழித்துப் போ. (தாத்யா கணபதி கோதே பாடீல்)

2. நாளைக்கே பம்பாய்க்குத் திரும்பிவிடு. (கோகுலாஷ்டமி பண்டிகையை முன்னிட்டு சிர்டீயில் ஒரு வாரம் தங்கும் திட்டத்துடன் வந்திருந்த காகா மஹாஜனி - பம்பாயில் எஜமானருக்கு ஓர் இக்கட்டு ஏற்பட்டிருந்தது.)


page 20 of 52



3. இப்போது சிர்டீயை விட்டுப் போகவேண்டா. ஒரு வாரம் தங்கிவிட்டுப் பிறகு செல்லலாம். (வக்கீல் துமால் - ஒரு வழக்கு விசாரணைக்காக நிஃபாடிற்குச் செல்ல அவசரப்பட்டபோது - வழக்கு ஒரு வாரம் கழித்துதான் நடந்தது!)

4. இந்த ஆண்டு கரும்பு சாகுபடி செய்யாதே. (பய்யாஜி பாடீல்)

5. அமராவதிக்கு இப்போது திரும்பவேண்டா. வக்கீல் வருமானம் அடிபட்டாலும் பரவாயில்லை. (கணேஷ் ஸ்ரீகிருஷ்ண காபர்டே - சுதந்திரப் போராட்ட வீரரான அவரை பிரிட்டிஷ் அரசாங்கம் கைது செய்யக் காத்துக்கொண் டிருந்தது. காபர்டே திலகருக்கு வலக்கையாகச் செயல்பட்டவர்.)

6. நீ தற்போது செய்யும் வியாபாரமே நன்று. மனக்கோட்டை கட்டாதே. பஞ்சு பேர வியாபாரத்திலும் தானிய வியாபாரத்திலும் நுழையாதே. எனக்கு லாபத்தில் பங்கு கொடுக்க விரும்புகிறாயா? நான் அதுமாதிரிச் சிக்கல்களில் மாட்டிக் கொள்ள விரும்பவில்லை. (தாமோதர் ஸாவல்ராம் ராஸனே காஸார் - பெருநஷ்டத்திலிருந்து காப்பாற்ற)

7. ரயிலைப் பிடிக்கவேண்டும் என்பதற்காகச் சாப்பிடாமல் போகாதே. உணவுண்டபின் கிளம்பு. (பல சமயங்களில் பல பக்தர்களை - ரயில் தாமதமாக வந்தது; அல்லது சிறப்பு ரயில் வந்தது!)

8. சாவடியை விட்டு நகராதே; மசூதிக்குக்கூட வரவேண்டா. (அமீர் சக்கர்)

9. கடன் வாங்கியாவது தக்ஷிணை கொடு. (நானா சாந்தோர்கர் - கர்வ பங்கம் + மற்ற பக்தர்களுக்குத் தவறான உபதேசம் செய்ததைத் தடுத்தல்)

10. நான் உனக்குத் தங்கச் சரிகை போட்ட சால்வை கொடுக்கக் காத்துக்கொண் டிருக்கிறேன். நீ ஏன் கந்தல் துணியைத் திருடுகிறாய்? (பாலகிருஷ்ண விச்வநாத் தேவ் - உன் அனுபவத்தை நீயே நேரில் பெறுக! - எனக்கு ஏஜெண்டுகள் யாரும் இல்லை என்பதை ஸங்கேத பாஷையில் தெரிவிக்கிறார்.)

11. குதிரை ஓடைக்கரையில் மேய்ந்துகொண் டிருக்கிறது. பிடித்துக் கொண்டு போம். (சாந்த் பாடீல் - காணாமற்போன குதிரையைத் தேடி அலைந்துகொண் டிருந்தபோது அருகே அழைத்துச் சொன்னது.)

12. தினமும் கண்டோபாவைத் தொழுதுவிட்டுத்தானே மசூதிக்கு வருவாய்? இன்றுமட்டுமென்ன? கோயில் கதவு திறந்துதான் இருக்கிறது. அங்கே போய்த் தொழுதபின் இங்கு வா. (மேகா)


page 21 of 52



13. நீ இனிமேல் மசூதியில் உறங்கவேண்டா; வீட்டில் உறங்கு. பல பெண்குழந்தைகளைப் பெற்றுவைத்திருக்கிறாய். வம்ச விருத்திக்கு ஆண் சந்ததி தேவை. (மஹால்ஸாபதி)

14. கடையில் எண்ணெய் இல்லையென்று பொய் சொல்லத் தேவையென்ன? கொடுக்க விருப்பமில்லை என்று சொல்லிவிட்டுப் போ. (சிர்டீ வணிகர்கள்)

15. ராஜாராம், ராஜாராம் என்று ஜபம் செய்யுங்கள்; நற்கதி கிடைக்கும். (லக்ஷ்மி பாயி காபர்டே)

16. தயிர் சாப்பிடாதே, ஆஸ்துமா வியாதி அதிகமாகும். (ஹம்ஸ்ராஜ்)

17. இது என் குரு ஸமாதியான இடம். எதையும் கலைத்துவிடாமல் முன்பிருந்தவாறே மூடிவிடுங்கள். (சிர்டீ கிராம மக்கள்)

18. பட்டினி கிடந்து உடலை வருத்தாதே; அதிகமாகவும் உண்ணாதே. (எல்லாருக்கும் பொதுவான உபதேசம்)

19. நான் பூஜை, புரஸ்காரம் எதையும் எதிர்பார்க்கவில்லை. ஆழ்ந்த நம்பிக்கையும் பொறுமையுடன் கூடிய விடாமுயற்சியும் இருந்தால் என்னை அடையலாம். (எல்லாருக்கும் பொதுவான உபதேசம்)

20. நான் போகிறேன்; என்னைத் தகடி வாடாவிற்கு (கல் கட்டடத்திற்கு) எடுத்துச் செல்லுங்கள். எல்லா பிராமணர்களும் (பிரம்மநாட்ட முடையவர்களும்) என்னருகே வசிப்பார்கள். (கடைசி வார்த்தைகள்)

இன்னும் எத்தனையோ! விரிவுக்கஞ்சி நிறைவு செய்கிறேன்; அனுமதியுங்கள்.

தீவிரமாகச் சிந்தித்துப் பார்த்தால், ஆபத்து வந்தபின் காப்பாற்றிய நிகழ்ச்சிகளைவிட, ஆபத்து வாராமல் காப்பாற்றிய நிகழ்ச்சிகள் பன்மடங்கு அதிகமாக இருந்திருக்கும் என்று நம்பலாம். ஆபத்து வந்தபின் காத்தருளிய நிகழ்ச்சிகள் வெளியுலகத்திற்குத் தெரிந்து பிரபலமடைகின்றன. ஆபத்து வாராமல் காத்த நிகழ்ச்சிகள் பிரபலமடைவதில்லை. சிலசமயங்களில் சம்பந்தப்பட்ட பக்தருக்கேகூடத் தெரியாமற் போகலாம்; அல்லது காலம் கழித்துத் தெரியவரலாம்.

இக் கருத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்ளும் வகையில், இயந்திரமயமான இவ்வுலகில் தற்போதைய சூழ்நிலையில் நடக்கும் சம்பவம் ஒன்றைப் பார்க்கலாம். ரயில்பாதையில் தடங்கலோ, வெடிகுண்டோ, மற்றொரு ரயிலோ இருப்பதைக்


page 22 of 52




கடைசி நிமிஷத்தில் கவனித்ததால், உடனே ரயிலை நிறுத்தி விபத்து நேராமல் சமயோசிதமாகத் தவிர்த்த ரயில் ஓட்டுநரின் பெயரையும் படத்தையும் செய்தியையும் மறுநாள் தினசரிப் பத்திரிகையில் கொட்டை எழுத்துகளில் பார்க்கிறோம். இம்மாதிரியான நிலைமையே ஏற்படாத வண்ணம் சதாசர்வகாலமும் பாதுகாத்துக்கொண்டிருக்கும் எத்தனையோ "சிக்னல் மேன்'களும் "கேட் கீப்பர்'களும் "காங்க்மென்'களும் "ஸ்டேஷன் மாஸ்டர்'களும் தினசரிப் பத்திரிகையில் இடம்பெறுதில்லை. இவர்களையாவது ரயில் பிரயாணம் செய்யும்போது காண்கிறோம். இவர்களுக்கெல்லாம் மேலாக, ரயில்கள் ஆபத்து ஏதுமில்லாமல் ரயில்பாதையில் சென்று திரும்பும் வகையில், ஓட்டைகள் ஏதுமில்லாத ஒரு நடைமுறைச் செயல்திட்டத்தை வடித்துக்கொடுத்து, அவ்வப்போது அதில் முன்னேற்றங்களையும் செய்துவரும் பொறியியல் வல்லுநர்கள் நம் கண்ணில் படுவதேயில்லை!

என்றோ ஒருநாள் நடக்கும் வீரதீரச் செயல்களே பிரபலமடைகின்றன. அமைதியாகவும் கட்டுப்பாட்டுடனும் ஒழுங்குமுறைப்படியும் நேர்மையாகவும் செம்மையாகவும் செய்யப்படும் தினப்படிச் செயல்கள் மக்களுடைய கவனத்தைக் கவர்வதில்லை; இது உலக இயற்கை!

விபத்துகளைப் பற்றிச் சிந்தனை செய்யும்போது, இப்படியும் ஒரு பக்தையா என்று நாம் வியக்கும் வகையில் பாண்டவர்களின் தாயார் குந்திதேவி மனக்கண்முன் தோன்றுகிறார். "பூமிபாரம் குறைப்பதற்காக ஸ்ரீமன் நாராயணனே ஸ்ரீகிருஷ்ணனாக அவதாரம் செய்திருக்கிறான்' என்பதை நன்கு அறிந்த சமகாலத்தவர்கள், விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் மிகச் சிலரே! அவர்களில் ஒருவர் குந்திதேவி. விசுவரூபம் கண்ட பிறகும் அர்ஜுனன் தோள்மீது கை போடும் நண்பனாகவே நடந்துகொண்டான். அது விஷ்ணுமாயையின் விளைவு!

குந்திதேவி ஸ்ரீகிருஷ்ணனிடம் என்ன பிரார்த்தனை செய்தார் என்று அறிந்துகொள்வோம்.

குந்தி கூறியது :-

கிருஷ்ணனுக்கு, வாஸுதேவனுக்கு, தேவகீநந்தனனுக்கு, நந்தகோப குமாரனுக்கு, கோவிந்தனுக்கு நமஸ்காரம், நமஸ்காரம். -- 1.8.21

உந்தித் தாமரையோனுக்கு, தாமரைமாலை யணிந்தவனுக்கு, தாமரைக் கண்ணனுக்கு நமஸ்காரம். தாமரை போன்ற பாதங்களையுடைய உனக்கு நமஸ்காரம். -- 1.8.22


page 23 of 52



இருஷீகேசா! சர்வேச்வரா! கொடிய கம்ஸனால் நெடுங்காலம் சிறையிலிடப்பட்டுத் துன்புறுத்தப்பட்ட தேவகி எவ்விதம் உன்னால் விடுவிக்கப்பட்டாளோ, அவ்விதமே உன்னையே நாதனாயடைந்த நானும் என் புத்திரர்களும் ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ந்துவந்த பல விபத்துகளினின்று விடுவிக்கப்பட்டோம். -- 1.8.23

ஜகத்குருவே! எங்கள் வாழ்க்கையில் எப்போதும் அடிக்கடி விபத்துகள் நேர்ந்துகொண்டே யிருக்கட்டும். ஏனெனில், அதனாலேயே உன் தரிசனம் கிட்டும். அந்த தரிசனம் பிறவாநிலைக்கு வழிகாட்டிக் கொடுக்கும். -- 1.8.25

ஸ்ரீமத் பாகவதம் -- ஸ்கந்தம் 1 -- அத்தியாயம் 8 -- சுலோகங்கள் 21, 22,

23 & 25 -- தெளிவுரை -- பூஜ்யஸ்ரீ அண்ணா ஹி. சுப்பிரமணிய ஐயர்.

"உன் தரிசனம் அடிக்கடி கிட்டும் வகையில், எனக்கு அடிக்கடி விபத்துகளைக் கொடு' என்று சாமானியர்களால் வேண்டமுடியாது என்பதே யதார்த்தம். இருப்பினும், "சங்கடம் வந்தால்தான் வேங்கடரமணன்' என்னும் சாமானியனின் மனோபாவம், குந்திதேவியின் பிரார்த்தனையைப் படித்த பிறகு கொஞ்சமாவது மாறும் என்று நம்பலாம்.

இந்த நாமம் ஸ்ரீஸாயீ ஸஹஸ்ர நாமாவளியில் 155ஆவது நாமம்.


28. மார்க்கபந்தவே நமஹ

வழித்துணைவருக்கு நமஸ்காரம்.

இது ஒரு சிவபரமான நாமமாகும். நம் வாழ்க்கை யெனும் நீண்ட பயணத்திற்குத் துணைவர் ஒருவர் வேண்டுமன்றோ?

ஒப்பு நோக்குக :-

காட்டுவழி யானாலும் கள்ளர்பய மானாலும்

இரவிற் பகலிலே எந்நேர மானாலும்

சிரமத்தைப் பார்ப்பதில்லை தேவரீர் தம்முடனே

சுற்றுவேன் தங்களுக்கோர் துன்பமுறா மற்காப்பேன்


கண்ணன் என் சேவகன் -- மஹாகவி பாரதியார்

இந்த நாமம் ஸ்ரீஸாயீ ஸஹஸ்ர நாமாவளியில் 733ஆவது நாமம்.


page 24 of 52




29. புக்தி முக்தி ஸ்வர்க்க அபவர்க தாய நமஹ |

இவ்வுலக இன்பங்கள், இறைவனை அடைதல், சுவர்க்கம், மீண்டும் பிறவாநிலை ஆகியவற்றை அளிப்பவருக்கு நமஸ்காரம்.

இவையனைத்தையும் ஒரு பக்தருக்கே அளிப்பார் என்று பொருள்கொள்ளல் ஆகாது. அவரவர் தகுதிக்கேற்றவாறு சம்மானம் வழங்குவார் என்பது பொருள். ஸ்ரீஸாயீ ஸஹஸ்ரநாமாவளியில், அபவர்க ப்ரதாத்ரே நமஹ என்றும் அபவர்க்க மயாய நமஹ என்றும் இரண்டு நாமங்கள் (71 & 72) உள்ளன. அவற்றின் விரிவுரையையும் படித்துப் பயனுறுக!


30. ப்ரியாய நமஹ |

(பக்தர்களுக்குப்) பிரியமானவருக்கு நமஸ்காரம்.

31. ப்ரீதி வர்தனாய நமஹ |



அன்பைப் போஷித்து வளர்ப்பவருக்கு நமஸ்காரம்.

அன்பே சிவம் அன்றோ!


32. அந்தர்யாமிணே நமஹ |

உள்ளுறையும் பரம்பொருளுக்கு நமஸ்காரம்.

உள்ளேயிருக்கும் இறைவனை வெளியில் தேடுவது சாதாரண மனிதனின் இயல்பு. இதில் வேடிக்கை என்னவென்றால், நம்மில் பெரும்பாலோர் தொலைதூரம் பயணஞ் செய்து, பொருட்செலவுஞ் செய்து ஒரு திருத்தலத்தை யடைகிறேம். கியூவில் பல மணி நேரம் காத்திருந்து திருத்தல மூர்த்தியை தரிசனஞ் செய்கிறோம். தரிசனஞ் செய்துகொண் டிருக்கும்போதே சட்டென்று கண்ணை மூடுகிறோம். அவ்வளவு பிரயாசைக்குப்பின் கிடைத்த காட்சியைக் கோயில் சேவகர்கள் அநுமதிக்கும்வரை கண்கொட்டாமற் பார்த்து மகிழலாமே! நடுவில் என்ன கண்ணை மூடி தியானம்? சிந்திக்க வேண்டிய விஷயம்.


ஒப்பு நோக்குக :-

நட்டகல்லை தெய்வமென்று நாலுபுஷ்பம் சாத்தியே

சுற்றிவந்து மொணமொணவென்று சொல்லு மந்திரம் ஏதடா


page 25 of 52



நட்டகல்லும் பேசுமோ நாதனுள் ளிருக்கையில்

சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ? -- சிவவாக்கிய ஸித்தர்

இந்த நாமம் ஸ்ரீஸாயீ ஸஹஸ்ர நாமாவளியில் 66ஆவது நாமம்.


33. ஸத் சித் ஆத்மனே நமஹ |

"இருக்கிறேன்' என்னும் அறிவுக்கு நமஸ்காரம்.

இந்த நாமம் அகண்டத்துடனும் ஆனந்தத்துடனும் இணைந்து ஸ்ரீஸாயீ ஸஹஸ்ர நாமாவளியின் முதல் நாமமாக உருவெடுத்திருக்கிறது.

விரிவாகப் பார்ப்போம்.

ஓம் அகண்ட ஸச்சிதானந்தாய நமஹ டு நாமம்

எங்கும் நிறைந்த ஸச்சிதானந்தத்திற்கு நமஸ்காரம் என்பது பொருள்.


ஸத் + சித் + ஆனந்தம் = ஸச்சிதானந்தம்.
ஸத் சித் ஆனந்தம்
உள்ளது
BEING
அறிவு
CONGNITION
ஆனந்தம்
BLISS

பிரம்மம் மனம் மொழிக்கு எட்டாதது. அது பிரபஞ்ச வடிவமாக உருவெடுக்கும்போது ஸத் சித் ஆனந்தம் என்று சொல்லப்படுகிறது. சொல்லற்கரிய பொருளை ஒரு சொல்லால் விளக்க வேண்டுமென்றால், ஸச்சிதானந்தம் என்பதற்கு நிகரான சொல் வேறு ஒன்றுமில்லை.

ஸத் என்னும் சொல் "உள்ளது' எனப் பொருள்படுகிறது. ஸத்தியம் அல்லது உண்மை அதனிடமிருந்து வருகிறது. ஆங்கிலத்தில் இதை Being அல்லது Existence என்று சொல்லலாம்.

"இருக்கிறேன்' என்ற அறிவு சேதனப்பொருளுக்கு உண்டு. ஜடப் பொருளுக்கு இந்த அறிவு இல்லை. ஜீவன் உயிரோடிருக்கிறான் என்பதற்கு அவனுடைய அறிவே பிரமாணம். ஒவ்வொரு உயிரும் தன்னைத்தான் அறிந்து கொண்டிருக்கிறது. இங்ஙனம் அறியும் தன்மையை ளீலிஆஐஷ்மிஷ்லிஐ என்கிறோம். அறியும் தன்மையில் ஏற்றத்தாழ்வு இருக்கலாம். ஆயினும் அறிவு இல்லாத உயிர் இல்லை. அறிவை வளர்ப்பதே வாழ்க்கையின் நோக்கம்.


page 26 of 52



பரமாத்மாவின் ஸ்வரூபம் ஆனந்தம். அன்பே கடவுள். அன்பு என்னும் கவர்ச்சி ஓங்குவதற்கு ஏற்ப இனிமை மிளர்கிறது. அது ஆனந்தமாகப் பரிணமிக்கிறது. ஆனந்தம் வளர வளர அது அளவில்லா ஆனந்தமாகிறது. ஆனந்தமே பிரம்மம். இந்த ஆனந்தத்தை நாடியே உயிர்கள் வாழ்க்கையில் பற்று வைக்கின்றன. ஆனந்தம் இல்லாவிட்டால் உயிர்கள் கணப்பொழுதும் வாழ்ந்திருக்கமாட்டா.


விளக்கம் -- பூஜ்யஸ்ரீ ஸ்வாமி சித்பவானந்தர்.

34. ஆனந்தாய நமஹ |

ஆனந்தமே உருவானவருக்கு நமஸ்காரம்.

ஒப்பு நோக்குக :-

1. ஸமாதியில் ஒருவனுடைய மனநிலைமை எப்படி யிருக்கும்? மீனொன்றைச் சிறிது நேரம் ஜலத்திலிருந்து எடுத்துவிட்டுப் பழையபடி தண்ணீரில் போட்டால் அது எவ்வளவு ஆனந்தம் அனுபவிக்குமோ அப்படி யிருக்கும்.
பகவான் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர்

2. உலகில் நாம் அநுபவிக்கும் சுகமெல்லாம் பரமானந்தத்தின் ஒரு திவலை. அதனொளியினால் உலகம் விளங்குகிறது. அப் பொருளைக் கண்டவர்க்கு மற்றதெல்லாம் அதனுள்ளே தோன்றும். ஸ்ரீ சங்கர பகவத் பாதர்.

35. ஆனந்த தாய நமஹ |

(பக்தர்களுக்கு) ஆனந்தம் அளிப்பவருக்கு நமஸ்காரம்.

36. பரமேஶவராய நமஹ

பரமேசுவரருக்கு நமஸ்காரம். |

சிர்டீ பாபா சிவாம்சமான அவதாரம் என்பது பரவலானதொரு கருத்து. சட்டென்று வரம் கொடுக்கும் குணமும் அவ்வப்பொழுது வெளிப்பட்ட ருத்திர தாண்டவமும் (பொய்க் கோபம்) காரணமாக விருக்குமோ!

இந்த நாமம் ஸ்ரீஸாயீ ஸஹஸ்ர நாமாவளியில் 575ஆவது நாமம்.


page 27 of 52




37. பரப்ரஹ்மணே நமஹ |

முழுமுதற்பொருளுக்கு நமஸ்காரம்.

38. பரமாத்மனே நமஹ |

எவரிடமிருந்து எல்லா உயிர்களும் தோன்றியனவோ அவருக்கு நமஸ்காரம்.

ஜீவர்களின் ஆத்மா ஜீவாத்மா எனவும் பரமனின் ஆத்மா பரமாத்மா எனவும் பெயர் பெறுகின்றன. ஜீவாத்மா பரமாத்மா சம்பந்தத்தைப் பற்றிய, குருதேவரின் அமுதமொழிகளில் ஒன்றைப் பார்ப்போம்.

""ஜீவாத்மா, பரமாத்மா என்ற இரண்டின் சேர்க்கையானது, ஒரு கடிகாரத்தில் மணிக்கொருதரம், நிமிஷத்தைக் காட்டும் முள்ளும் மணியைக் காட்டும் முள்ளும் சேர்வதை ஒக்கும். அவை ஒன்றோடொன்று சம்பந்தப்பட்டவை. ஒன்றன்மீது மற்றொன்று சார்ந்துமுள்ளது. சாதாரணமாக அவை தனித் திருப்பினும், தகுதியான சந்தர்ப்பங்கள் வாய்க்கும்போதெல்லாம் ஒன்றுசேரும்.


பகவான் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர்.

39. ஞான ஸ்வரூபிணே நமஹ

ஞானமே உருவானவருக்கு நமஸ்காரம்.

"ப்ரஜ்ஞானம் பிரம்ம' என்பது ஐதரேய உபநிஷதத்தில் இடம் பெற்றுள்ள ருக்வேத மஹாவாக்கியம். மஹாவாக்கியம் என்பது ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் இடையே உள்ள சம்பந்தத்தைப் பறைசாற்றும் அச்சாணி வாசகம். ஐதரேய உபநிஷதத்தின் உள்ளே புகுந்துதான் இந்த மஹாவாக்கியத்தின் பொருளை அறியமுடியும். ஜன்னல் வழியாகவாவது பார்ப்போம்; வாரீர்!

இங்கு இருதயம் எனப்படுவதும், மனம் எனப்படுவதும் அதுவே. ஸம்ஜ்ஞானம் (உணர்வு), ஆஜ்ஞானம் (ஆட்சி), விஜ்ஞானம் (கலைஞானம்), ப்ரஜ்ஞானம் (பகுத்தறிவு), மேதை (அறிவின் கூர்மை) திருஷ்டி (மனக்கண்கொண்டு காணுதல்), த்ருதி (மனோதிடம்), மதி (மனனசக்தி)மனீஷா (நிச்சயபுத்தி), ஜூதி (மனக்கலக்கம்), ஸ்ம்ருதி (ஞாபகசக்தி), ஸங்கல்பம் (விருப்பம்), க்ரது (தீர்மானம்), அஸு (பிராணசக்தி), காமம் (ஆசை), வசம் (விஷயங்களில் கவர்ச்சி) என்ற இவையெல்லாம் ப்ரஜ்ஞானத்தின் (வெவ்வேறு) பெயர்களேயாகின்றன. -- ஐதரேய உபநிஷதம் 3.2


page 28 of 52



மேற்கண்ட பதினாறு கலைகளுடன் சிதாகாசத்தில் (ஞானவெளியில்) பிரஜ்ஞான வடிவினனாய்ப் பிரகாசிப்பவன் இந்த ஆத்மா என்று உணர வேண்டும். உலகம் பிரஜ்ஞானத்தாலேயே நடத்தப்படுகிறது; பிரஜ்ஞானத்தாலேயே நிலைபெறுகிறது. பிரஜ்ஞானமே பிரம்மம்.ஐதரேய உபநிஷதம் (சாராம்சம்) -- பூஜ்யஸ்ரீ அண்ணா ஹி. சுப்பிரமணிய ஐயர்.


40. ஜகதஹ பித்ரே நமஹ |

உலகிற்குத் தந்தையானவருக்கு நமஸ்காரம்.

இந்த நாமம் ஸ்ரீஸாயீ ஸஹஸ்ர நாமாவளியில் 345 ஆவது நாமம்.


41. பக்தானாம் மாத்ரு தாத்ரு பிதாமஹாய நமஹ |

பக்தர்களுக்குத் தாயும் தந்தைக்குத் தந்தையும் (பாட்டனாரும்) ரட்சகருமாகியவருக்கு நமஸ்காரம்.

பெரும்பாலான மக்களுக்குச் சிலா ரூபத்தில், கண்களில் அன்பு பொங்கும் கம்பீரமான தாத்தாதான் தெரிகிறார்; அடியேனுக்கும் உட்பட.


42. பக்த அபய ப்ரதாய நமஹ |

பக்தர்களுக்கு பயத்தை நீக்கி அடைக்கலம் அளிப்பவருக்கு நமஸ்காரம்.

அத்வைத ஸித்தியை அளிப்பவர் என்றும் பொருள் சொல்ல வாய்ப்புண்டு. ஏனெனில், முற்றிலும் பயமற்ற நிலை அத்வைத அநுபவத்தில்தான் சாத்தியம்.


43. பக்த பராதீனாய நமஹ |

பக்தர்களிடம் கட்டுண்டவருக்கு நமஸ்காரம்.

பராதீனன் = சுதந்திரமில்லாதவன் = அடிமை.


44. பக்த அநுக்ரஹ காதராய நமஹ |

பக்தர்களுக்கு அநுக்கிரஹம் செய்வதில் ஏக்கத்துடன் ஆர்வம் காட்டுபவருக்கு நமஸ்காரம்.

page 29 of 52



திருமயிலை பாபா கோயிலின் முகமண்டபத்துள் நுழையும்போதே கிழவனார், ""வா, வா, வா'' என்றழைப்பதுபோல் சில நாள்களில் அடியேனுக்குத் தோன்றும். இது ஒரு பிரமையோ என்று நினைப்பதுவும் உண்டு. பிரமையாகவே இருப்பினும் இது ஓர் ஆனந்தமான அநுபவமன்றோ? இவ்வுலகமே ஒரு பெரிய பிரமைதானே? பாபா ஆர்வத்துடன் அழைக்கும் அநுபவம் பிரமைக்குள் பிரமையாக இருந்துவிட்டுப் போகட்டுமே; லாபந்தானே!

இதை எழுதும்போது எனக்கு அருட்பிரகாச வள்ளலாரின் நினைவு வருகிறது. திருமுல்லைவாயில் கிராம மகளிரில் ஒருவர் செய்த தகாத செயலை, அங்கே கோயில்கொண்டிருக்கும் மாசிலாமணீசுவரரின்மேல் ஏற்றி (அங்கே நடப் பதற்கெல்லாம் அவர்தானே பொறுப்பு!) "என்னை வாவென்று உரைத் திலையே' என்று மனம் நொந்து பாடினார் ஸ்ரீராமலிங்க வள்ளலார். அத் தலத்தில் பாடிய 10 பாட்டுகளிலும் இந்த வருத்தம் தொனிக்கிறது. ஒரு வீட்டு வாசற் திண்ணையில் படுத்துக்கொண் டிருந்த வள்ளலாரை விரட்ட, அவ்வீட்டுப் பெண்மணி ஒருவர், அவர்மீது சுடுநீரைக் கொட்டியதாக, கர்ணபரம்பரைத் தகவல். "வாடின பயிரைக் கண்டபோதெல்லாம் வாடியவருக்கு' எவ்வளவு வருந்தத்தக்க வரவேற்பு! (திருமுல்லைவாயில் சென்னையிலிருந்து ஆவடி செல்லும் மார்க்கத்தில் அம்பத்தூரை அடுத்து உள்ளது. சுந்தரர், வள்ளலார் பாடிய திருத்தலம்).

வள்ளலார் தமிழின் இனிமையை அனுபவிப்பதற்காகவே ஒரே ஒரு பாட்டை நோக்குவோம்.

துப்புநே ரிதழி மகிழ்ந்த கல்யாண (துப்புநேர் = பவளத்திற்கு ஒப்பான)

   சுந்தரா சுந்தரன் தூதா

மைப்பொதி மிடற்றாய் வளர்திரு முல்லை

   வாயில்வாழ் மாசிலா மணியே

அப்பனே யுன்னை விடுவேனோ அடியேன்

   அறிவிலே னெனினும்நின் கோயிற்கு

எய்ப்புடன் வந்தால் வாவென உரையா (எய்ப்பு = இளைப்பு, தளர்ச்சி)

   திருப்பதுன் திருவருட் கியல்போ!

திரு அருட்பா -- வடதிருமுல்லைவாயில் அருளியல் வினாவல் -- பாட்டு 3 -- வள்ளலார் ஸ்ரீ ராமலிங்க ஸ்வாமிகள்


page 30 of 52



திருமயிலையில் அடியேனுக்கு ஏற்படும் அநுபவத்திற்கு நேர் எதிரானது வள்ளல் பெருமானின் திருமுல்லைவாயில் அநுபவம். ஆயினும், அதையும் வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று ஏனோ எனக்கொரு உந்துதல்! ஒரு கருத்தினுட் புகுந்து அதன் ஒரு நுனியைப் பரிசீலிக்கும்போது அக் கருத்தின் எதிர்நுனியும் நம்மை ஈர்ப்பது மனத்தின் இயல்பு போலும்!

இந்த நாமம் ஸ்ரீஸாயீ ஸஹஸ்ர நாமாவளியில் 653ஆவது நாமம்.


45. ஶரணாகத வத்ஸலாய நமஹ |

அடைக்கலம் புகுந்தவர்களின்மீது தாயன்பு காட்டுபவருக்கு நமஸ்காரம்.


ஒப்பு நோக்குக :-

சரணாகதி செய்வோர் இரண்டு வகை ஆவர். குரங்குக்குட்டிகளைப் போலும்; பூனைக்குட்டிகளைப் போலும். குரங்குக்குட்டி தன் தாயைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்கிறது; பூனைக்குட்டியோ தாயைப் பிடித்துக்கொள்ளச் சக்தியற்றதாய், விட்ட இடத்திலேயே கிடக்கிறது. குரங்குக்குட்டி தன் பிடிப்பை விடுமானால் கீழே விழுந்து காயமுறும். பூனைக்குட்டியைத் தாய்ப்பூனையே தூக்கிச் செல்வதால், அது அவ்வித ஆபத்துக் குள்ளாவதில்லை.
பகவான் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர்.

பாபா தாயன்பு காட்டுகிறார் என்பது பக்தர்களின் பிரத்யக்ஷ அநுபவம். "பூனைக்குட்டி சரணாகதிதான்' சிறந்தது என்பதும் உள்ளங்கை நெல்லிக்கனி. தம்முடைய சரணாகதி எத்தகையது என்பதை ஒவ்வொருவரும் தம்மைத் தாமே துருவித்தான் தெளிவுபெற வேண்டும். இந்த ஜன்மத்தில் இயன்றாலும் இயலாது போனாலும், நோக்கி நடக்கவேண்டிய இலக்கு இதுதான்!

இந்த நாமம் ஸ்ரீஸாயீ ஸஹஸ்ர நாமாவளியில் 845ஆவது நாமம்.

46. பக்தி ஶக்தி ப்ரதாய நமஹ |

பக்தியையும் சக்தியையும் சிறப்பாக அளிப்பவருக்கு நமஸ்காரம்.

பக்தியை அளிப்பவர் அவர்தான். பக்தி பண்ணுவதற்குண்டான சக்தியை அளிப்பவரும் அவர்தான். "அவனருளாலே அவன் தாள் வணங்கி' என்கிறார் சிவபுராணம் பாடிய மாணிக்கவாசகர்.


page 31 of 52




47. ஞான வைராக்ய தாய நமஹ |

ஞானத்தையும் உலகப் பற்றின்மையையும் அளிப்பவருக்கு நமஸ்காரம்.

இந்த நாமம் சொல்வதன் நோக்கம், "எனக்கும் ஞானமும் வைராக்கியமும் அளித்தருள்வீராக' எனப் பிரார்த்தனை செய்வதேயாம்.

வைராக்கியம் என்பது ராகமின்மை (ஆசையின்மை). புலன்களில் பற்றில்லாதிருப்பது வைராக்கியம். மனம் அடங்காது ஓடுவதற்குக் காரணம் யாது என்று விசாரித்துப் பார்த்தால், அது எப்பொழுதாவது எதனிடத்தாவது பற்று வைத்திருந்தால் அப் பொருளையே நாடியலைகிறது என்பது விளங்கும். ஐம்பொறிகள் சம்பந்தப்பட்ட கேடுகளை மனத்துக்கு ஞாபகமூட்டி அதனை அவற்றிலிருந்து மீட்டெடுப்பது வைராக்கியமாம்.

வைராக்கியம் என்னும் ஸம்ஸ்கிருதச் சொல்லுக்கு அர்த்தம் உலகப்பற்றின்மை, புலன்களிற் பற்றின்மை என்பதுதான். வெறுப்பு, பகை, விரோதம், விடாப்பிடி போன்ற எதிர்மறை அர்த்தங்களும் தமிழில் காலப்போக்கில் உட்புகுந்துவிட்டன.

இந்த நாமம் ஸ்ரீஸாயீ ஸஹஸ்ர நாமாவளியில் 402 ஆவது நாமம்.


48. ப்ரேம ப்ரதாய நமஹ |



பிரேமையை நல்குபவருக்கு நமஸ்காரம் |

ப்ரேம = Intense overflowing love = பொங்கிவழியும் அன்பு.

பகவான் ஸ்ரீகிருஷ்ணர் ஆயர்பாடி மக்களின் பிரேமைக்கும் குந்திதேவி, விதுரர் போன்ற பக்தர்களின் பிரேமைக்குமே வசப்பட்டார். ஆட்சிபலம், செல்வ பலம், படைபலம் போன்ற வேறு எந்தவிதமான சக்திக்கும் வசப்படவில்லை. ஸாயி பக்தர்கள் முதற்படியாக வளர்த்துக்கொள்ள வேண்டியது ஸாயியிடம் பிரேமை கொள்வதுதான். இது காலப்போக்கில் வளர்ந்து எல்லா மனிதர்களிடமும் பிரேமை, ஸகல ஜீவராசிகளிடத்தும் பிரேமை என மலர்ந்து பக்தரைப் பிரேமைக் கடல் ஆக்கிவிடும். அந்நிலையில் அவர், அன்பே சிவம் என்று அமர்ந்திருப்பாரே!


page 32 of 52




ஒப்பு நோக்குக :-

1. அன்பால் கரைந்து கண்ணீர் ஆறுகண்ட புண்ணியருக்கு உன்பால் வரவழிதான் உண்டோ பராபரமே. -- பராபரக்கண்ணி 95

ஸ்ரீதாயுமான ஸ்வாமிகள்.

2. அப்பா! நான் வேண்டுதேல்கேட் டருள்புரிதல் வேண்டும்,

ஆருயிர்கட் கெல்லாம் நான் அன்புசெயல் வேண்டும். -- திருவருட்பா

திருவருட் பிரகாச வள்ளலார்.

இந்த நாமம் ஸ்ரீஸாயீ ஸஹஸ்ர நாமாவளியில் 618 ஆவது நாமம்.

49. ஸம்ஶய ஹ்ருதய தௌர்பல்ய பாப கர்ம வாஸனா க்ஷய கராய நமஹ

சந்தேகம், மனத்திட்பமின்மை, பாவச் செயல்களைச் செய்யத் தூண்டும் வாசனை ஆகிய மூன்றையும் அழித்துவிடுபவருக்கு நமஸ்காரம்.

1. எதற்கெடுத்தாலும் சந்தேகப்படுபவன் அழிந்துபோகிறான்.

2. மனத்திட்பமில்லாதவனால் எதையும் சாதிக்க வியலாது. ஒவ்வொரு படியிலும் தடுமாறுவான்; முன்னேற்றம் காணவியலாது தவிப்பான்.

3. முன்ஜன்ம அநுபவங்கள் மனிதனின் மூலபிரகிருதியில் புதைந்துபோய்க் கிடந்து (விதை மண்ணில் புதையுண்டு கிடப்பதுபோல), நடப்பு ஜன்மத்தில் தக்க வேளையில் எண்ணமாகவும் செயலாகவும் வடிவெடுக்கவல்ல இயல்புக்கு வாசனை எனப் பெயர். சில முன்ஜன்ம வாசனைகள் மனிதனைப் பாவம் செய்யவும் தூண்டும்.

மேற்கண்ட மூன்று பலவீனங்களையும் ஒரு மனிதனிடமிருந்து களைந்தெறிவது இமாலய அருட்கொடை அன்றோ? ஸமர்த்த ஸத்குருவைத் தவிர வேறு எவரால் இதைச் செய்யமுடியும்?


ஒப்பு நோக்குக :-

அக்ஞஸ்சாச்ரத்ததானஸ்ச ஸம்சயாத்மா வினச்யதி

நாயம் லோகோஅஸ்தி ந பரோ ந ஸுகம் ஸம்சயாத்மன: -- 4.40


page 33 of 52



அறிவிலி, சிரத்தையில்லாதவன், ஐயமுறுபவன், அழிவடைகிறான், ஐயமுறுபவனுக்கு இவ்வுலகும் இல்லை, அவ்வுலகும் இன்பமும் இல்லை. -- தெளிவுரை.

ஆத்ம சொரூபத்தை அறியாதவன் அறிவிலி அல்லது அக்ஞானியாவான். தன் மீதும், குரு மீதும் சாஸ்திரத்திடத்தும் நம்பிக்கை வைக்காதவன் சிரத்தையில்லாதவனாகிறான். உலகத்தில் எல்லாரிடத்தும் சந்தேகம் கொள்ளும் இயல்புடையவர் சிலர் இருக்கின்றனர். அத்தகையவர் ஐயமே வடிவெடுத்தவர் ஆவர். யார் எதைச் சொன்னாலும், செய்தாலும் அதெல்லாம் தமக்குக் கேடு விளைவிக்கும் என்றே அன்னவர் கருதுகின்றனர். இம்மைக்குத் தகுதியுடையவனே மறுமைக்கும் தகுதியுடையவன் ஆகிறான். உலகத்தவரை நம்புகிறவளவு உலகத்தவர் ஒரு மனிதனுக்கு உரியவர் ஆகின்றனர். பரஸ்பர நம்பிக்கையிலும் உதவியிலுந்தான் உலக வாழ்க்கையில் சுகம் உண்டு. ஒருவரையும் நம்பாது உலகத்தவருக்கு வேற்றானாயிருப்பதே பெரிய வேதனையாகிறது. இத்தகைய பான்மையுடையவனுக்கு ஆத்ம ஞானம் கைகூடாது; சுகமான வாழ்க்கைக்கும் அவன் தகுதியற்றவனாவான். -- விரிவுரை

ஸ்ரீமத் பகவத்கீதை பாஷ்யம் -- அத்தியாயம் 4 -- சுலோகம் 40 --

பூஜ்யஸ்ரீ ஸ்வாமி சித்பவானந்தர்.

50. ஹ்ருதய க்ரந்தி பேதகாய நமஹ

பக்தர்களின் இதயத்தின் முடிச்சைக் ("உடலே நான்' என்னும் உணர்வைக்) கிழித்தெறிபவருக்கு நமஸ்காரம்.

பக்தர்களுக்கு, "நான் இவ்வுடல் இல்லை' என்னும் ஞானத்தை அருள்பவர் என்பது உட்பொருள்.

""நான் யார்?'' என்னும் சிந்தனையில் தீவிரமாக இறங்கியவர்கள், "நான் இந்த உடல் அல்லேன்' என்னும் உண்மையை உணர்வார்கள் என்பது பிரம்ம ஞானிகளின் திருவாய்மொழி. குருவின் கருணையின்றி இந்தச் சிந்தனையே எழாது. ஞானிகளுக்கு இது பிறவி இயல்பாக அமைகிறது!

இந்த நாமம் ஸ்ரீஸாயீ ஸஹஸ்ரநாமத்திலும் உண்டு; 995 ஆவது நாமம்.


page 34 of 52




51. கர்ம த்வம்ஸினே நமஹ |

ஊழ்வினையை அழிப்பவருக்கு நமஸ்காரம்.

ஒரு பக்தனுக்கு இதைவிடப் பெரிய அருட்கொடை கிடைக்குமோ!

ஸ்ரீ ஸாயீ ஸஹஸ்ர நாமாவளியில் நான்கு நாமங்கள் (232, 233, 234 & 235) இக் கருத்தை யொட்டி அமைந்துள்ளன.


52. ஶர்த்த ஸத்வ ஸ்திதாய நமஹ |

தூய ஸத்துவ குணத்தில் நிலைத்தவருக்கு நமஸ்காரம்.

ஸ்ரீஸாயீ ஸஹஸ்ர நாமாவளியில் 301ஆவது நாமம் சம்பந்தப்பட்டது. விரிவுரையைப் படித்துப் பயனுறுக!


53. குணாதீத குணாத்மனே நமஹ |

முக்குணங்களுக்கு அப்பாற்பட்ட, குணங்களின் மூலப் பொருளானவருக்கு நமஸ்காரம்.

இந்த நாமம் ஸ்ரீஸாயீ ஸஹஸ்ர நாமாவளியில் இரண்டு நாமங்களாகப் (301 & 302) பிரிந்து அமைந்திருக்கிறது. அவற்றின் விரிவுரையில், முக்குணங்களைப் பற்றிய ரஹஸியங்களை பகவான் ஸ்ரீகிருஷ்ணர் ஸ்ரீமத் பகவத்கீதையில் அருளியவாறும் பூஜ்யஸ்ரீ ஸ்வாமி சித்பவானந்தர் அளித்திருக்கும் சிறப்பு மிக்க வியாக்கியானத்தையும் படித்துத் தத்துவ விளக்கம் பெறுக! ஆன்மீக நாட்டம் உள்ளவர்களுக்கு இது இன்றியமையாத உள்ளீடு.


54. அனந்த கல்யாண குணாய நமஹ |

மங்களங்களை விளைவிக்கும், எண்ணிலடங்காத குணங்களை உடையவருக்கு நமஸ்காரம்.

55. அமித பராக்ரமாய நமஹ |

அளவிலா வீரம் படைத்தவருக்கு நமஸ்காரம்.

இந்த நாமம் ஸ்ரீஸாயீ ஸஹஸ்ர நாமாவளியில் 94ஆவது நாமம்.


page 35 of 52




56. ஜயினே நமஹ |

வெற்றிவடிவானவருக்கு நமஸ்காரம்.

ஐம்புலன்களையும் வென்றவருக்கு நமஸ்காரம் என்று பொருள் கூறவும் வாய்ப்புண்டு. இந்துமதத்தின் ஒரு கிளையான ஜைன மதத்திற்கு அப் பெயர் ஏற்பட்ட காரணமே புலனடக்கம்தான்.


57. துர்தர்க்ஷ அக்ஷோப்யாய நமஹ |

கெடுமதியாளர்களின் செயல்களாலும் கிளர்ச்சியடையாதவருக்கு நமஸ்காரம்.

இதற்குச் சான்றாகச் சரித்திரத்தில் பல நிகழ்வுகள் உண்டு. எண்ணெய் இல்லை என்று பொய் சொன்ன வியாபாரிகள், சோதனை செய்து பார்க்க வந்த சில போலி பக்தர்கள், கட்டையெடுத்து அடிக்க வந்த ரோஹில்லா, "ஒரு முசுலீமை நான் வணங்கமாட்டேன்' என்று முடிவு செய்துகொண்டு வந்து, பின்னர் அத்தியந்த பக்தராக மாறிய மேகச்யாமர், "எனக்கு சிஷ்யனாக சேவை செய்' எனச் சொல்லி பாபாவைக் கசக்கிப் பிழிந்த ஜவஹர்அலி மௌலானா, ஆசாரபங்கம் விளையும் எனக் கருதி மசூதியின் வராந்தாவிலிருந்தே பூக்களை வீசிய மூலே சாஸ்திரி, பாபாவிடம் சென்றால் பணம் பறிக்கலாம் என்ற கெட்ட எண்ணத்துடன் சிர்டீக்கு வந்த மதறாஸ் (தற்போதைய சென்னை) பஜனைக் குழுவினர், விஷ்ணு ஸஹஸ்ர நாமாவளிப் புத்தகத்தை சாமாவுக்குக் கொடுத்ததற்காகக் கோபங்கொண்டு இரைச்சலிட்ட ராமதாசி, மற்ற பக்தர்களிடம் நல்லிணக்கம் இல்லாத உபாஸனி சாஸ்திரி ஆகியோர்கள் பலர் ஸ்ரீ ஸாயீ ஸத் சரித்திரத்தில் இடம் பெற்றிருக்கின்றனர். இடம் பெறாதவர்கள் அநேகர் இருக்க வாய்ப்பு நிறையவே உண்டு. அவர்கள் அனைவரையும் திருத்திச் செம்மைப்படுத்தினார் பாபா.


58. அபராஜிதாய நமஹ |

எவரை வெற்றிகொள்ள இயலாதோ, அவருக்கு நமஸ்காரம்.

59. த்ரிலோகேஷூ அஸ்கந்தித கதயே நமஹ |

மூவுலகங்களுக்கும் தடையின்றிச் செல்பவருக்கு நமஸ்காரம்.

page 36 of 52




60. அஶக்ய ரஹிதாய நமஹ |

"இயலாதது' என்று ஒன்றும் இல்லாதவருக்கு நமஸ்காரம்.

61. ஸர்வ ஶக்தி மூர்தயே நமஹ |

அனைத்து சக்திகளும் உருவெடுத்தவருக்கு நமஸ்காரம்.

62. ஸுரூப ஸுந்தராய நமஹ |

அழகிய உருவமுள்ளவருக்கு நமஸ்காரம்.

அழகான கிழவர்! முதுமையிலும் அழகு உண்டு!


63. ஸுலோசனாய நமஹ |

அழகிய கண்களை யுடையவருக்கு நமஸ்காரம்.

64. பஹுரூப விஶவ மூர்தயே நமஹ |

பலப்பல உருவங்களிலும் பிரபஞ்ச வடிவினராகவும் இருப்பவருக்கு நமஸ்காரம்.

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமாவளியின் முதல் நாமமே அவரை "உலக வடிவினன்' (விச்வம்) எனப் போற்றுகிறது.


65. அரூப அவ்யக்தாய நமஹ |

(தோன்றாநிலையில்) அருவமாக இருப்பவருக்கு நமஸ்காரம்.


ஒப்பு நோக்குக :-

1. இறைவன் அருவமா அல்லது உருவமா என்ற ஆராய்ச்சி வேண்டா. அது உருவமாகவும் இருக்கிறது; அருவமாகவும் இருக்கிறது. ஆணாகவும் இருக்கிறது; பெண்ணாகவும் இருக்கிறது. ஒரே பொருள் நீராகவும் பனிக்கட்டியாகவும் இருப்பதை நாம் பார்க்கவில்லையா? நீர் அருவம்; பனிக்கட்டி உருவம். ஸச்சிதானந்த பிரம்மமே பராசக்தியாகவும் ராமனாகவும் கிருஷ்ணனாகவும் வெளிப்படுகிறது. இயக்கு சக்தியாக இருக்கும்போது அருவம்;


page 37 of 52




இயங்கு சக்தியாக மாறும்போது உருவம்! உருவவழிபாட்டில் ஆரம்பித்து அருவவழிபாட்டில் முடிக்கமுடியுமா என்று முயற்சி செய்! பகவான் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர்.

   2. உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
       மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
       கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
       குருவாய் வருவாய் அருள்வாய் குகனே. -- கந்தரநுபூதி -- 51.


ஸ்ரீ அருணகிரிநாத சுவாமிகள்

உருவாகவும் அருவாகவும், அன்பருக்கு உள்ள பொருளாகவும், அன்பரல்லார்க்கு இல்லாத பொருளாகவும், ஞானமாகிய நறுமணப் பொருளாகவும், அம் மணத்தின் மூலமாகிய மலராகவும் ஒன்பது மணிகளாகவும், மணியின் ஒளியாகவும், எல்லாவற்றுக்கும் மூலப்பொருளாகவும், உயிர்க்கு உயிராகவும், வீடுபேற்றையடையும் நன்னெறியாகவும், அதனால் அடையப்படும் வீடுபேறாகவும் விளங்கும் குகப்பெருமானே! குருவாக எழுந்தருளி வந்து காத்தருள்வீராக!

--பொழிப்புரை -- திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்.


சிவலிங்கமும் சிலுவைச் சின்னமும் அருவுருவத்திற்கு உதாரணங்கள்!

66. அசிந்த்யாய நமஹ |

சிந்தனைக்கு அப்பாற்பட்டவருக்கு நமஸ்காரம்.

67. ஸூக்ஷ்மாய நமஹ |

ஆதியான சூக்கும காரணமாக இருப்பவருக்கு நமஸ்காரம்.

தியானத்தினால் மட்டும் புலப்படக்கூடிய நுண்ணிய சொரூபமுடையவருக்கு நமஸ்காரம் எனவும் பொருள் கூறலாம். இந்த நாமம் ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமாவளியிலும் உண்டு; 457 ஆவது நாமம்.


68. ஸர்வ அந்தர்யாமிணே நமஹ |

அனைத்து ஜீவராசிகளினுள்ளும் உறையும் பரம்பொருளுக்கு நமஸ்காரம்.

69. மனோ வாக் அதீதாய நமஹ |

எண்ணத்திற்கும் சொல்லுக்கும் அப்பாற்பட்டவருக்கு நமஸ்காரம்.

page 38 of 52




70. ப்ரேம மூர்தயே நமஹ |

அன்பே உருவானவருக்கு நமஸ்காரம்.

அன்பே சிவம் என்று அமர்ந்திருந்தாரே. -- திருமூலர்.

நாமம் 48 சம்பந்தப்பட்டது.


71. ஸுலப துர்லபாய நமஹ|

சான்றோர்களால் சுலபமாக அடையக்கூடியவருக்கும் தீயோர்களால் அடைய முடியாதவருக்கும் நமஸ்காரம்.

>72. அஸஹாய ஸஹாயாய நமஹ|

திக்கற்றவர்களின் துணைவருக்கு நமஸ்காரம்.

உதவி ஏதும் கிடைக்காதவர்களுக்கு உதவுபவர் என்பது வார்த்தைக்கு வார்த்தை பொருள்.


73. அநாத நாத தீன பந்தவே நமஹ|

திக்கற்றவர்களின் ரட்சகரும் நலிந்தோரின் உறவினருமாகியவருக்கு நமஸ்காரம்.

தீனன் என்னும் வடமொழிச் சொல்லுக்கு, நலிந்தோன், இரப்போன், வறியவன், துன்பமுற்றவன், பரிதாபகரமானவன், துர்ப்பாக்கியவான், எளியவன் ஆகிய பல பொருள்கள் உண்டு.


74. ஸர்வ பார ப்ருதே நமஹ |

(பக்தர்களின்) எல்லா பாரங்களையும் சுமப்பவருக்கு நமஸ்காரம்.

இதற்கு இணையாக ஸ்ரீஸாயீ ஸஹஸ்ர நாமாவளியில் ஒரு நாமம் (628) உண்டு. அதையும் பார்ப்போமே?

ப்ருஹத் பாரவஹ க்ஷமாய நமஹ டு -- நாமம்

உலகத்தின் (பக்தர்களின்) சுமைகளைத் தூக்கும் திறமை படைத்தவருக்கு நமஸ்காரம். -- பொருள்



பாரவஹ = A porter -- க்ஷம = Competent.
page 39 of 52



நாம் அளிக்கும் அல்ப தக்ஷிணையை ஏற்றுக்கொண்டு நம் கர்மச் சுமைகளனைத்தையும் தூக்கி நம்மைக் கரையேற்றும் கருணைக்கடல் அன்றோ பாபா! அதனைப் பிரதிபலிப்பதற்காகவே "பாரவஹ' (ணைலிக்ஷமிளக்ஷ) என்னும் சொல்லை ரத்தினம்போல் பதித்திருக்கிறார் ஸ்வாமிஜி.


75. அகர்ம அநேக கர்ம ஸுகர்மிணே நமஹ |

(ஆத்மாவை சாட்சியாகக் கொண்டு) பலன் எதையும் எதிர்பாராது பலப்பல நற்செயல்களைச் செய்தவருக்கு நமஸ்காரம்.

ஸ்ரீமத் பகவத்கீதையின் அச்சாணிக் கருத்தே, (உபதேசமே) பலன் கருதாது செயலாற்றுவதுதான்.


76. புண்ய ஶரவண கீர்தனாய நமஹ |

தமது பெருமையைப் பாடுபவர்களுக்கும் காதால் கேட்பவர்களுக்கும் புண்ணியத்தைக் கூட்டிவைப்பவருக்கு நமஸ்காரம்.

இந்த நாமம் ஸ்ரீஸாயீ ஸஹஸ்ர நாமாவளியில் 592ஆவது நாமம்.


77. தீர்த்தாய நமஹ |

(பாவங்களை நீக்குவதில்) புனித தீர்த்தத்தை ஒத்தவருக்கு நமஸ்காரம்.

ஸ்ரீஸாயீ ஸஹஸ்ர நாமாவளியில் 433 சம்பந்தப்பட்டது.


78. வாஸுதேவாய நமஹ|

வஸுதேவரின் மகனுக்கு (ஸ்ரீ கிருஷ்ணனுக்கு) நமஸ்காரம்.

சில பக்தர்களுக்கு ஸ்ரீகிருஷ்ணனாகவும் காட்சியளித்திருக்கிறார் பாபா. நாமம் 3 சம்பந்தப்பட்டது.

ஸ்ரீஸாயீ ஸஹஸ்ர நாமாவளியில் நாமங்கள் 175 & 248 சம்பந்தப்பட்டவை.


79. ஸதாம் கதயே நமஹ |

சாதுக்களின் வழியும் சென்றடையும் இலக்குமானவருக்கு நமஸ்காரம்.


ஒப்பு நோக்குக :-

ஏசு அவரிடம் கூறினார், ""வழியும் உண்மையும் வாழ்வும் நானே : .........''



புனித விவிலியம் -- யோவான் 14 : 6
page 40 of 52




80. ஸத் பராயணாய நமஹ

சாதுக்களின் குறிக்கோளும் புகலிடமுமானவருக்கு நமஸ்காரம்.

81. லோகநாதாய நமஹ

உலகத்தின் நாயகனுக்கு நமஸ்காரம்.

82. பாவன அநகாய நமஹ

புனிதரும் களங்கமற்றவருமானவருக்கு நமஸ்காரம்.

83. அம்ருதாம்ஶவே நமஹ

சந்திரனைப் போன்று குளிர்ச்சி யளிப்பவருக்கு நமஸ்காரம்.

84. பாஸ்கர ப்ரபாய நமஹ

சூரியனைப் போன்று ஒளிவட்டம் வீசுபவருக்கு நமஸ்காரம்.

85. ப்ரஹ்மசர்ய தபஸ்சர்யாதி ஸுவ்ரதாய நமஹ

பிரம்மசரியத்தை முதலாகக் கொண்ட தவவொழுக்கங்களைச் சிறப்பாகக் கடைப்பிடித்தவருக்கு நமஸ்காரம்.

ஒப்பு நோக்குக :-

1. ஒருவன் பன்னிரண்டு வருஷங்கள் வழுவாத பிரம்மசரிய விரதம் அனுசரித்தால் அவனிடம் மேதாநாடி தோன்றுகிறது. அதாவது, எதையும் அறிந்துகொள்ளும் சக்தி மலர்கிறது. வெகு சூக்குமமான விஷயங்களையும் அவன் சுலபமாக அறிந்துகொள்வான். அவ்வித அறிவால் ஒருவன் ஈசுவர தரிசனத்தையும் அடையக்கூடும்! அவ்விதம் பரிசுத்தமடைந்த, தெளிந்த அறிவுள்ளவர்களாலேயே கடவுளை அடையமுடியும்.

பகவான் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர்.

2. ப்ரசாந்தாத்மா விகதபீஹி ப்ரஹ்மசாரி வ்ரதே ஸ்திதஹ மனஹ ஸம்யம்ய மச்சித்தோ யுக்த ஆஸீத மத்பரஹ -- 6.14


page 41 of 52



உள்ளம் அமைதிபெற்று, அச்சத்தை அகற்றி, பிரம்மசரிய விரதம் காத்து, மனத்தையடக்கி, சித்தத்தை என்பால் இசைத்து, என்னைக் குறியாகக்கொண்டு யோகத்தில் அமர்ந்திருக்கவேண்டும். -- பொழிப்புரை -- ஸ்ரீமத் பகவத்கீதை பாஷ்யம் -- அத்தியாயம் 6 -- சுலோகம் 14 -- பூஜ்யஸ்ரீ ஸ்வாமி சித்பவானந்தர்.

ஸ்ரீஸாயீ ஸஹஸ்ர நாமாவளியில் 630ஆவது நாமம் சம்பந்தப்பட்டது.


86. ஸத்ய தர்ம பராயணாய நமஹ

ஸத்தியத்தையும் தர்மத்தையும், குறிக்கோளாகவும் புகலிடமாகவும் கொண்டவருக்கு நமஸ்காரம்.

பராயண = Final end or aim, Last resort or refuge.

இந்த நாமம் ஸ்ரீஸாயீ ஸஹஸ்ர நாமாவளியில் 889ஆவது நாமம்.


87. ஸித்த ஈஶவராய நமஹ

சித்தர்களின் தலைவருக்கு நமஸ்காரம்.

சித்தர்களுக்கெல்லாம் தலைவர் பரமேசுவரன். ஆகவே இந்த நாமத்திற்குப் பரமேசுவரனுக்கு நமஸ்காரம் என்றும் பொருள் கூறலாம்.

இந்த நாமம் ஸ்ரீஸாயீ ஸஹஸ்ர நாமாவளியில் 979ஆவது நாமம்.


88. ஸித்த ஸங்கல்பாய நமஹ

நிறைவேறும் சங்கற்பத்தை யுடையவருக்கு நமஸ்காரம்.

பாபா (நினைத்தது) நினைப்பது அனைத்தும் நடந்தேறும் என்பது விரிவான பொருள்.

இந்த நாமம் ஸ்ரீஸாயீ ஸஹஸ்ர நாமாவளியில் 980ஆவது நாமம். ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாமாவளியிலும் உண்டு; 253ஆவது நாமம்

ஒப்பு நோக்குக :-

1. எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்

திண்ணிய ராகப் பெறின். -- திருக்குறள் 666


page 42 of 52



எண்ணியவர் (எண்ணியபடியே செயல் ஆற்றுவதில்) உறுதியுடையவராக இருக்கப்பெற்றால், அவர் எண்ணியவற்றை எண்ணியவாறே எய்துவார். -- தெளிவுரை -- மு. வரதராசனார்.

2. "பாவமற்றதும் மூப்பற்றதும் சாவற்றதும் துன்பமற்றதும் பசி, தாஹமற்றதும் ஸத்தியமான ஆசையையும், ஸத்தியமான விருப்பத்தையும் உடையதும் ஆன ஆன்மா எதுவோ அதைத் தேட வேண்டும். அதை அறிய வேண்டும். அதைத் தேடி அறிந்தவன் எல்லா உலகங்களையும் எல்லா ஆசைகளையும் அடைகிறான்' என்று பிரஜாபதி கூறினார். -- சாந்தோக்கிய உபநிஷதம் -- 8.7.1. -- பூஜ்யஸ்ரீ அண்ணா ஹி. சுப்பிரமணிய ஐயர் உரை.


89. யோகேஶவராய நமஹ |

யோகத்தின் தலைவருக்கு நமஸ்காரம்.

யோகிகளின் தலைவர் என்றும் பொருள் கூறலாம். யோகிகளின் தலைவர் சிவன். யோகம் என்னும் சொல் அஷ்டாங்கயோகத்தைக் குறிப்பது மட்டுமல்லாமல், இணைதல், கூடுதல், ஒன்று சேர்தல், விரும்பியதை அடைதல் ஆகிய அர்த்தங்களையும் சுட்டும்.

நாமம் 26 சம்பந்தப்பட்டது.


90. பகவதே நமஹ |

பகவானுக்கு (கடவுளுக்கு) நமஸ்காரம்.

இறைவனைக் குறிக்க எத்தனையோ சொற்கள் உள்ளபோது, ஆதி பகவன் என்னும் சொல்லை முதற் குறளிலேயே எடுத்தாள்கிறார் தமிழ்மறை ஈந்த திருவள்ளுவர்.


91. பக்த வத்ஸலாய நமஹ |

பக்தர்களிடம் தாயன்பு காட்டுபவருக்கு நமஸ்காரம்.

வத்ஸல = Affectionate towards offspring - A cow longing for her calf.

பக்தவத்ஸலன் என்பது பெருமாளின் சிறப்புப் பெயர்; தொண்டை மண்டலத்தில் ஜனாபிமானமாக வழங்கும் பெயர். திருநின்றவூர் (தொண்டை மண்டலம்) பெருமாளுக்கும் திருக்கண்ணமங்கை (சோழநாடு) பெருமாளுக்கும்


page 43 of 52



பக்தவத்ஸலன் என்பது திருநாமம். இன்னும் பல தலங்களிலுங்கூட பெருமாளுக்கு இப் பெயர் உண்டு.

இந்த நாமம் ஸ்ரீஸாயீ ஸஹஸ்ர நாமாவளியில் 646ஆவது நாமம்.


92. ஸத் புருக்ஷாய நமஹ |

சான்றோனாகிய ஆண்மகனுக்கு நமஸ்காரம்.

வேதங்கள் நான்கிலும் இடம்பெறும் புருஷஸூக்தம் துதிபாடும் புருஷர். பெருமாள் என்று பொருள் காண்பது சிறப்பு.

இந்த நாமம் ஸ்ரீஸாயீ ஸஹஸ்ர நாமாவளியில் 895ஆவது நாமம்.


93. புருக்ஷோத்தமாய நமஹ |

புருஷர்களில் (ஆடவர்களில்) மேன்மையானவருக்கு நமஸ்காரம்.

புருஷர்களில் உத்தமர் புருஷோத்தமர். இந்த நாமம் சிறப்பாக ஸ்ரீமன் நாராயணனைக் குறிக்கும்.

ஸ்ரீவேங்கடேச ஸஹஸ்ர நாமாவளியிலும் இந்த நாமம் உண்டு; ஸ்ரீஸாயீ ஸஹஸ்ர நாமாவளியில் 596ஆவது நாமம்.


94. ஸத்ய தத்வ போதகாய நமஹ |

மெய்ப்பொருள் சம்பந்தமான தத்துவங்களை சிறப்பாக போதித்தவருக்கு நமஸ்காரம்.

"ஸத்திய தத்துவம்' -- இச் சொற்றொடருக்கு இங்கே "கடவுட் தத்துவம்' என்று பொருள்கொள்வதே சிறப்பு.

இந்த நாமம் ஸ்ரீஸாயீ ஸஹஸ்ர நாமாவளியில் 894ஆவது நாமம்.


95. காமாதி ஸர்வ அஜ்ஞான த்வம்ஸினே நமஹ |

காமத்தை (ஆசையை) முதலாகக்கொண்ட எல்லா அறிவீனங்களையும் அழிப்பவருக்கு நமஸ்காரம்.

page 44 of 52



மனிதனின் உள் எதிரிகள் ஆறு. அவையாவன : காமம், குரோதம், மோஹம், லோபம், மதம் (செருக்கு, வெறி), மாச்சரியம். இவற்றையும் அறிவீனங்களாகவே கருதி நாமம் இயற்றியிருக்கிறார் பூஜ்யஸ்ரீ நரஸிம்ஹ ஸ்வாமிஜி. இவை மட்டுமின்றி எல்லா அறிவீனங்களையுமே பாபா அழித்துவிடுவார் எனப் பொருள்கொள்ளவும் இடமுண்டு.


96. அபேத ஆனந்த அநுபவ ப்ரதாய நமஹ |

(எதிலும்) வேற்றுமை காணாத பா(யஜுழி)வத்தால் விளையும் ஆனந்தத்தைச் சிறப்பாக அளிப்பவருக்கு நமஸ்காரம்.

அவர் அநுபவித்துக்கொண் டிருந்த ஆனந்தத்தை அடியார்களுக்கும் அருள்வார் என்பது உட்கிடை. இறைவனின் சிருஷ்டி யனைத்தையும் வேற்றுமையின்றி சமபா(யக்ஷிபு)வத்துடன் நோக்க இயன்ற மனிதரின் இதயத்தில் பேரானந்தம் பொங்கும்! ஆயினும், யதார்த்தம் என்ன? ஜாதி, மதம், இனம், பால், மொழி, கல்வி, செல்வம், வயது, உத்தியோகம், வருமானம், அந்தஸ்து, பதவி, அதிகாரம், உடை, உணவு ஆகியனவாக எத்தனை எத்தனை விஷயங்களில் பேதம் பாராட்டுகிறான் மனிதன்! பேதபா(யஜுழி)வம் அவனுக்கே எத்தனை இன்னல்களை உண்டுபண்ணுகிறது!

அத்வைத ஸித்திக்கு அபேதபா(யஜுழி)வம் அரிச்சுவடி ஆகுமன்றோ! சேவையிற் சிறந்த பக்தை லக்ஷ்மிபாயிக்கு பாபா செய்த அபேதபா(யஜுழி)வ உபதேசம் என்னவென்று பார்ப்போமா?

"லக்ஷ்மீ, எனக்குப் பசி எடுக்கிறது.'' ""பாபா, நான் இப்போதே போய் உங்களுக்குச் சில சோளரொட்டிகள் கொண்டுவருகிறேன்.'' -- 98

என்று சொல்லிக்கொண்டே லக்ஷ்மீ தம் இல்லத்திற்குச் சென்றார். சோளரொட்டி, காய்கறி பதார்த்தம், சட்டினி இவற்றைச் சுடச்சுடச் செய்து எடுத்துக் கொண்டு தாமதம் இன்றித் திரும்பிவந்தார். அந்தச் சிற்றுண்டியை பாபாவின் எதிரில் வைத்தார். -- 99

பாபா அந்தத் தட்டை எடுத்து ஒரு நாயின் முன்னே வைத்தார். லக்ஷ்மீ பாயீ உடனே கேட்டார், ""பாபா, நீங்கள் என்ன இவ்வாறு செய்கிறீர்கள்? -- 100

"நான் ஓடோடிச் சென்று என்னுடைய கைகளாலேயே சீக்கிரமாக ரொட்டி செய்துகொண்டு வந்தேன். அதற்குப் பலன் இதுதானா? உண்மையான மகிழ்ச்சியை நாய்க்கன்றோ கொடுத்துவிட்டீர்கள்! -- 101


page 45 of 52



"நீங்கள் பசியாக இருந்தீர்கள்; அந்தப் பசியைத் தணிப்பதற்கு இதுதான் வழியா? ஒரு துண்டுகூட நீங்கள் வாயில் இடவில்லை; நான் இங்கே தவித்துக்கொண்டு நிற்கிறேன்!"-- 102

பாபா அப்பொழுது லக்ஷ்மீ பாயீயிடம் கூறினார், ""நீ ஏன் வீணாக வருத்தப்படுகிறாய்? நாயின் வயிறு நிறைந்தால் நான் திருப்தியடைகிறேன் என்று அறிவாயாக! -- 103

"இந்த நாய்க்கு உயிர் இல்லையா? எல்லாப் பிராணிகளுக்கும் பசி என்பது ஒன்றுதான். அது ஊமை; நான் பேசுகிறேன். எனினும், பசியில் ஏதாவது பேதம் உண்டா என்ன? -- 104

"பசியால் வாடும் எந்த உயிருக்கும் அன்னதானம் செய்பவர் உண்மையில் அதை என்னுடைய வாயில் இடுகிறார் என்று அறிவாயாக! இது எங்கும், என்றும், பிரமாணம் என்றும் அறிவாயாக!'' -- 105

இது அன்றாடம் நடக்கும் சாதாரண நிகழ்ச்சி; ஆயினும் போதனையோ ஆன்மீக பாஷை. ஸாயீயின் உபதேசபரமான திருவாய்மொழி இவ்வாறே; பிரேமையெனும் ரசத்தால் பரிபக்குவம் செய்யப்பட்டது. -- 106

மக்கள் அன்றாடம் பேசும் எளிய மொழியில் பேசியே ஆன்மீகத் தத்துவங்களை உபதேசித்தார் பாபா. யாருடைய தோஷத்தையும் (குறையையும்) ரகசியத்தையும் சுட்டிக்காட்டாது, ஆன்மீக போதனை அளித்து சிஷ்யர்களை மகிழ்வித்தார். -- 107 ''

ஸ்ரீமத் ஸாயீராமாயணம் -- அத் 42 -- சுலோ 98 மிலி 107

இந்த நாமம் ஸ்ரீஸாயீ ஸஹஸ்ர நாமாவளியில் 90ஆவது நாமம்.


97. ஸம ஸர்வ மத ஸம்மதாய நமஹ |

எல்லா மதங்களையும் சமமாக ஏற்றுக்கொண்டவருக்கு நமஸ்காரம்.

மதத்தால் பிளந்துகிடந்த பாரததேச மக்களை ஒற்றுமைப்படுத்தி ஒன்றுபடச் செய்து மேன்மையுறச் செய்வதற்காகவே இறைவன் எடுத்த அவதாரம் ஸ்ரீ சிர்டீ ஸாயீபாபா. அவருக்கு இரண்டு ஆண்டுகள் முந்திப் பிறந்த குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர் உலகத்திற்கு அளித்த போதனையும் "ஸர்வ மத ஸம்மதமே'. தமிழ்நாட்டின் ராமலிங்க அடிகளும் அவ்வாறே.


page 46 of 52



ஒப்பு நோக்குக :-

1. ""மாமுனி வோர்பலர் வாழ்ந்தபொன் னாடு''

""புத்தர் பிரானருள் பொங்கிய நாடு

பாரத நாடு பழம்பெரு நாடே''

எனப் புதுவைக்குயில் பாரதியாரால் பெருமையாகப் பேசப்படுவது நம் இந்தியத் திருநாடு. இந் நாட்டில் பண்டுதொட்டு முனிவர் பலர் தோன்றி, நாட்டு மக்கட்கு நன்னெறி காட்டி மறைந்துள்ளனர்.

அந்த வரிசையில் 19ஆம் நூற்றாண்டின் முற்பாதியில் மூவர் தோன்றி இறைநெறியையும் நன்னெறியையும் மக்கட்குப் புகட்டிப் பொன்றாப் புகழ் அடைந்தனர்.

இம் மூவருள் தமிழ்நாட்டில் தோன்றிய இராமலிங்க அடிகள் (கி.பி. 1823 - 74) முந்தையவர் ஆவார். இவர் ஒளி வழிபாட்டினை உலகுக்கு உணர்த்தியவர்; வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம் வாட்டமுற்றவர்; சமரச சன்மார்க்கம் கண்டு பரப்பியவர்; வடலூரில் சத்திய ஞான சபையையும் தருமச் சாலையையும் ஏற்படுத்தியவர்; கண்மூடிப் பழக்கமெல்லாம் மண்மூடிப் போக விழைந்தவர்; திருவருட்பாப் பாடிய செம்மல்.

இவரை அடுத்து வங்காளத்தில் இராமகிருட்டினர் தோன்றினார் (கி,பி, 1836 -86). காளிகோயில் பூசாரியான இவர், இறையன்பில் மூழ்கித் திளைத்தவர்; அடிக்கடி சமாதிநிலை அடைந்து தம்மை மறந்தவர்; நாத்திக மனப்பான்மை கொண்ட நரேந்திரரைத் தம்பால் ஈர்த்துக் கட்டிப் போட்டவர். சுவாமி விவேகானந்தராக ஆகிய நரேந்திரர், வடஅமெரிக்க நாட்டுச் சிகாகோ நகரில் கி.பி. 1893ல் நடந்த அனைத்துலகச் சமய மகாநாட்டில் இந்தியாவின் பெருமையையும் இந்துமதத்தின் பெருமையையும் பறைசாற்றினார்; உலக முழுவதும் இராமகிருட்டின மடங்கள் தோன்றக் காரணமாய்த் திகழ்ந்தார்.

மூன்றாவதாக, மகாராட்டிர மாநிலத்தில் நம் சாயி பாபா கி.பி. 1838ல் தோன்றினார். இந்துவாகப் பிறந்தாலும் இசுலாம் சமயத்தைச் சார்ந்தவரால் வளர்க்கப்பட்டார். முந்தைய இருவரும் மணஞ் செய்து கொண்டவர்கள் எனினும் துறவியராகவே வாழ்ந்தார்கள். இவரோ பிள்ளைப் பருவத்திலிருந்தே துறவியாக வாழ்ந்தவர்.


page 47 of 52



இந்துமதம், இசுலாமிய மதம் இரண்டினையும் இணைக்கும் பாலமாகத் திகழ்ந்தார்; 1918ல் இம் மண்ணுலகை விட்டு மறைந்தாலும் அவர் காட்டிச் சென்ற நெறி உலக முழுதும் பரவிவருகின்றது.

இராமகிருட்டினருக்கு ஒரு விவேகானந்தர் கிடைத்ததுபோல், மற்ற இருவருக்கும் அவர்கள் வாழ்ந்த காலத்தில் தக்கவர் கிடைக்கவில்லை. எனினும், இன்று உலக முழுதும் பரவும் வாய்ப்பு உருவாகிவருகின்றது.

மூன்று பெரியார்களும் சித்தி கைவரப் பெற்றவர்கள்; அன்பு நெறியைப் பரப்பியவர்கள்; மக்கட்கு நன்னெறியைப் புகட்டியவர்கள். சாயி செய்த சித்திகளும், வருவதுரைக்கும் திறனும், ஆற்றிய மக்கள் தொண்டும் அவர் புகழைப் பரப்பின; மக்களை அவர்பால் ஈர்த்தன.

அவர் ஆற்றிய விந்தைச் செயல்கள் பலப்பல. காணாமற் போன குதிரையைத் தேடி அலைந்த சாந்துபாய் பாடீலுக்கு, அஃது இருந்த இடத்தைச் சுட்டிக்காட்டினார்.

மனக்கவலை கொண்டோரும் பிணியுற்றோரும் பாபாவை நாடிச் சென்றனர். பகலவனைக் கண்ட பனி போலக் கவலைகளும் பிணிகளும் அகன்று இன்புற்றனர்.

ஸ்ரீமத் ஸாயீராமாயணம் -- மதிப்புரை (பகுதி) -- புலவரடல் அ. நக்கீரன்.


98. தக்ஷிணாமூர்தயே நமஹ |

தென்முகமாயிருக்கும் சிவபெருமானுக்கு நமஸ்காரம்.

ஒப்பு நோக்குக :-

சித்ரம் வடதரோர்மூலே வ்ருத்தாஹா சிஷ்யா குருர்யுவா ணூ

குரோஸ்து மௌனம் வ்யாக்யானம் சிஷ்யாஸ்து சின்ன ஸம்சயாஹா ணூணூ

ஆலமரத்தினடியில் அமர்ந்திருக்கும் சிஷ்யர்கள் கிழவர்கள்; குரு இளைஞர். குரு மௌனமாக வியாக்கியானம் செய்கிறார்; சிஷ்யர்கள் சந்தேகங்களினின்று விடுபடுகின்றனர். என்னே இவ்வற்புதம்!

தக்ஷிணாமூர்த்தி தோத்திரம் -- தியான சுலோகம் 5 -- தெளிவுரை

பாபா தம்முடைய உபதேசங்களைப் பெரும்பாலும் சூழலை


page 48 of 52



உருவாக்குவதாலும் கனவுகளாலும் தெய்வீகக் காட்சிகளின் மூலமுமாகவே செய்தார். பிரத்யேகமான உபதேசங்கள் ஓரிரண்டே சரித்திரத்தில் இடம் பெற்றுள்ளன. இது சம்பந்தமாக, அவருடைய திருவாய்மொழியைக் கேட்போம்.

"தாயே, இம்மசூதியில் உட்கார்ந்துகொண்டு நான் சொல்வதைப் பிரமாணமாக எடுத்துக்கொள்ளுங்கள். குரு என்னுடைய காதில் மந்திரம் ஏதும் ஓதவில்லை. அப்படியிருக்க, நான் எப்படி உங்களுடைய காதுகளில் மந்திரம் ஓதமுடியும்? -- 69

"தாய் ஆமையின் அன்பான கடைக்கண் பார்வையே குட்டி ஆமைகளுக்கு திருப்தியும் சந்தோஷமும் கொடுக்கும். அம்மா! ஏன் உங்களை நீங்களே

வருத்திக் கொள்கிறீர்கள்? எனக்கு வாஸ்தவமாகவே வேறெந்த உபதேசமும் செய்யத் தெரியாது.'' -- 70

ஸ்ரீமத் ஸாயீராமாயணம் -- அத்தியாயம் 19 -- சுலோகங்கள் 69 & 70

இந்த நாமம் ஸ்ரீஸாயீ ஸஹஸ்ர நாமாவளியில் 460ஆவது நாமம்.


99. வேங்கடேஶ ரமணாய நமஹ |

திருமலை வேங்கடேசப் பெருமாளுக்கு நமஸ்காரம்.

மக்களை ஈர்த்து அநுக்கிரஹம் செய்வதில் திருமலை வேங்கடேசப் பெருமாளுக்கு இணையாகிவிட்டார் அல்லரோ பாபா!


100. அத்புத அனந்த சர்யாய நமஹ |

எண்ணில்லா அற்புதங்களை விளைவிப்பவருக்கு நமஸ்காரம்.

கலியுகத்தில் அற்புதங்கள் நிகழ்த்தித்தான் கடவுள் நம்பிக்கையை ஊட்டவேண்டும் என்கிற நிர்ப்பந்தம் நிலவுகின்றதன்றோ? யுகதர்மம் போலும்! மக்களைக் குறைசொல்ல முடியாது. அவர்கள் படும் அல்லல்களே காரணம். 'ஏதாவது சிறிய நிவாரணம் கிடைக்காதா' என்று அலைகின்றனர்.

அற்புதங்கள் மக்களுடைய கர்மபலனை அடியோடு அழிக்காவிட்டாலும், வாழ்க்கையை எதிர்த்துப் போராடும் மனவலிமையை அளிக்கின்றன. சில மனிதர்களுக்கு மரணத்தை சாந்தியுடன் எதிர்கொள்ளும் மனோபாவத்தை அளிக்கின்றன. அற்புதங்கள் மனிதனின் விஞ்ஞான அறிவிற்கும் அப்பாற்சென்று செயல்பட்டு, நம்மைவிடப் பெரிய மகத்தான சக்தியொன்று இப் பிரபஞ்சத்தை


page 49 of 52



இயக்குகிறது என்பதற்கு ஆதாரம் காட்டி, மனிதனை நல்வழிப்படுத்துகின்றன. தம்மை நாடிவரும் பக்தனுக்கு நல்லறிவு தந்து நல்வழிப்படுத்தி, "அன்பே சிவம்', "மக்கள் சேவையே மகேசன் சேவை' என்பதையெல்லாம் புரியவைத்து, ஆன்மீக வளர்ச்சி தருவதே ஒரு ஸத்குருவின் கடமையாகும். இதுவே அற்புதங்களின் உள்நோக்கமுமாகும்.

அற்புதங்கள் விளைவித்து ஆன்மீக பரிபாகத்திற்கும் (முதிர்வுக்கும்) அதன் உச்ச நிலையான அத்வைத ஸித்திக்கும் வழிகாட்டினார் பாபா. அவருடைய திவ்விய சரித்திரத்தை படிக்க மட்டும் செய்தால் அற்புதங்கள்தான் தெரியும். படித்தபின் நிதித்யாசனம் (இடைவிடாத தியானம்) செய்தால், மணிகளின் ஊடே நூலிழை ஓடுவதுபோல் அற்புதங்களுக்குள்ளே அத்வைத போதனை ஓடுவது புலப்படும். எல்லா ஸாயீ பக்தர்களுக்கும் இது சாத்தியம்; தேவை முயற்சிதான்!

அற்புதங்கள் நிகழ்த்துதல் வேத சம்மதம். எல்லா அவதார புருஷர்களுமே தேவைக்கேற்றவாறு அற்புதங்கள் செய்திருக்கின்றனர். தனிமனிதனைப் பொறுத்தவரை, ஆன்மீக ஏணியில் அடுத்த படிக்கு ஏறுவதுதான் மிகப் பெரிய அற்புதம்! இது சுலபமன்று; குருவருள் தேவை. ஸாயீ பக்தர்கள் நாடவேண்டியதும் இதுதான்!

101. ப்ரபன்ன அர்தி ஹராய நமஹ |

தஞ்சமடைந்தவர்களின் துன்பங்களை மாய்ப்பவருக்கு நமஸ்காரம்.

ப்ரபன்ன = Surrender அர்தி = Pain


102. ஸம்ஸார ஸர்வ துஹ்க க்ஷய கராய நமஹ |

உலக வாழ்வில் ஏற்படக்கூடிய எல்லா துக்கங்களையும் அழிப்பவருக்கு நமஸ்காரம்.

103. ஸர்வவித் ஸர்வதோ முகாய நமஹ |

எப் பக்கமும் பார்க்கக்கூடிய முகங்களால் எங்கு நடப்பதையும் அறிந்து கொள்பவருக்கு நமஸ்காரம்.

page 50 of 52



104. ஸர்வ அந்தர் பஹிஹி ஸ்திதாய நமஹ |

எவ்வுயிரிலும் எப்பொருளிலும், உள்ளும் புறமும் நிலைபெற்றவருக்கு நமஸ்காரம்.

105. ஸர்வ மங்கள கராய நமஹ |

எல்லா மங்களங்களையும் அருள்பவருக்கு நமஸ்காரம்.

106. ஸர்வ அபீஷ்ட ப்ரதாய நமஹ |



பக்தர்களின் (நியாயமான) கோரிக்கைகள் எல்லாவற்றையும் நிறைவேற்றுபவருக்கு நமஸ்காரம்.

107. ஸமரஸ ஸன்மார்க ஸ்தாபனாய நமஹ |

சமரச சன்மார்க்கத்தை நிலைநாட்டியவருக்கு நமஸ்காரம்.

சன்மார்க்கத்தின் சிறப்பு அம்சம் "எம்மதமும் சம்மதம்'. இந்த மார்க்கத்தில் சாதி, சமய, இன, குல வேறுபாடுகள் எவையும் இல்லை.

தமிழ்நாட்டில் சமரச சன்மார்க்கத்தை போதித்தவர் வடலூர் ராமலிங்க வள்ளலார்.

சமகால ஞானிகளின் அனுபவங்களும் சமமாகவே இருந்திருக்கின்றன; யுகதர்மம் போலும்! ""என்னுடைய கஜானா நிரம்பி வழிகிறது. ஆனால் யாருக்குமே வண்டிகளைக் கொண்டுவரும் சிரத்தை இல்லை.'' -- ஸ்ரீஸாயீ பாபா. ""கடை விரித்தோம்; கொள்வாரில்லை; கட்டிவிட்டோம்.'' -- ஸ்ரீராமலிங்க அடிகள்.

ஒப்பு நோக்குக :- (சமகால அவதார புருஷரின் உபதேசம்)

1. ஒரே வஸ்துவான தண்ணீரைச் சிலர் ஜலம் என்றும், சிலர் அக்வா என்றும், சிலர் பாணி என்றும், கூறுவதுபோல் பரம்பொருள் ஒன்றையே சிலர் கடவுள் என்றும், சிலர் அல்லா என்றும், சிலர் ஹரி என்றும் அழைக்கின்றனர்.

2. ஓர் ஆற்றில், குளிக்கும் துறைகள் பல இருக்கின்றன. உலகிலுள்ள ஒவ்வொரு மதமும் அப்படிப்பட்ட துறைகளில் ஒன்றாகும். உன்னுடைய துறை உயர்ந்தது, மற்றவை தாழ்ந்தவை என்று சொல்லாதே.


page 51 of 52



3. ஈசுவரனுடைய நாமங்கள் அனந்தம், ரூபங்களும் அனந்தம். நீ எந்த நாமரூபத்துடன் அவனை அறிய உள்ளன்புடன் விரும்புகிறாயோ, அந்த நாமரூபத்துடன் அவன் உனக்குப் புலப்படுவான்.

பகவான் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர்.

108. ஸமர்த்த ஸத்குரு ஸாயீநாதாய நமஹ |

சர்வ வல்லமை பொருந்திய ஸத்குரு ஸாயீநாதருக்கு நமஸ்காரம்.

குரு = அஞ்ஞான இருளை நீக்கி ஞானம் அருள்பவர்

ஸத்குரு = அஞ்ஞான இருளை நீக்கி ஞானம் அளிப்பது மட்டுமல்லாமல் சிஷ்யனின் நல்வாழ்வு பற்றிய அக்கறையுங்கொண்டு வழிநடத்துபவர்.

ஸமர்த்த ஸத்குரு = ஞானத்தை அளித்து, நல்வாழ்வையும் அளித்து, தம் வசமுள்ள ஸித்திகளால் சிஷ்யனின் கர்மவினையை யும் விலக்கிக் கரையேற்றுபவர்.

ஜய் ஸ்ரீ ஸமர்த்த ஸத்குரு ஸாயிநாத் மஹராஜ்கீ ஜய்!





மங்களம்


page 52 of 52


   
 
Morning Arathi Noon Arathi Evening Arathi Night Arathi Arathi Audio Evening Arathi
Morning Arathi Mantrochhar Noon Arathi Evening Arathi Night Arathi
Sai Satcharita - Tamil - Full translation from Marathi Sai Satcharita English Sai Satcharita Hindi - Poems Sai Satcharita Audio - Tamil Shri Sainath Sthavan Manjari - English
English Hindi (हिन्दी) Kannada (ಕನ್ನಡ) Malayalam (മലയാളം) Tamil (தமிழ்) Telugu (టెలుగు) Shirdi Sai Trust SST Poojas SaiAshram Videos
Brief history of Shirdi Saibaba Devotees Experiences
Brief history of Shirdi Saibaba Devotees Experiences
Brief history of Shirdi Saibaba Devotees Experiences
Brief history of Shirdi Saibaba Devotees Experiences
Brief history of Shirdi Saibaba Devotees Experiences
Brief history of Shirdi Saibaba Devotees Experiences
Saibaba's Jayanthi Guru Poornima Maha Samadhi SST Chennai
Shri Raja Ganapathy Mahameru Evening Aarthi Shri Sai Utsavar Shri Sai Gurusthan Shri Sai Dwaramahye Shri Sai Sahasshranama & Asthothram
SaiAshram Package 1 Inauguration SaiAshram Samarpan Video SaiAshram - IndiaTV News SaiAshram Opening TV9 Report
Sai bhajans Divine Songs List of CD, DVDs
Hindi (हिन्दी) Tamil (தமிழ்) Telugu (టెలుగు)
Hindi (हिन्दी) Tamil (தமிழ்)
English Tamil (தமிழ்) Malayalam (മലയാളം) Hindi (हिन्दी)
Original Photos of Shri Saibaba Pictures of Sai Mandir at Shirdi Shirdi Sai Trust SaiAshram Picture
Pictures of Shirdi Sai Trust Complex Bhumi Pooja of Sai Ashram Project Pictures of Shirdi Sai Dwarakamayee Pictures of Shirdi Sai Gurusthan Pictures of Shirdi Sai Shri Saibaba Pictures of Shirdi Sai Shri Mahameru Pictures of Shirdi Sai Meditation Hall Pictures of Shirdi Sai Trust Office Pictures of Shirdi Sai Raja Ganapathy Sanctum
SaiAshram Bumi Puja Function SaiAshram Rooms Completed Puja SaiAshram Dormitory Completed Puja SaiAshram Samarpan To Saibaba SaiAshram Pitambar Vastram Samarpan To Sai Noon Arathi SaiAshram Rooms & Dormitory Completed Pictures SaiAshram Thanks Meeting SaiAshram Trial Opening To Devotees SaiAshram Package 1 - Inauguration Sansthan Memento Sansthan Citation
India Other Countries
Andhra Pradesh Tamilnadu Uttar Pradesh New Delhi Maharashtra Karnataka West Bengal Punjab Pondicherry Orissa Madhya Pradesh Haryana Himachal Pradesh Kerala Bihar Pondicherry
United States of America Canada Hong Kong Malaysia Singapore Australia
Guidelines for building and managing Sai mandirs Copy of sample trust deed Plan, Drawings and Specifications for building Sai Mandir Murthy Pranapratishta Pranapratishta Pujas and Naivedy Other Charitable Activities Functions and Festivals Administration Useful addresses in Shirdi
Shirdi Sai Trust SST Poojas Photo Gallery
Saibaba's Jayanthi Guru Poornima Maha Samadhi SST Chennai
Shri Raja Ganapathy Mahameru Evening Aarthi Shri Sai Utsavar Shri Sai Gurusthan Shri Sai Dwaramahye Shri Sai Sahasshranama & Asthothram
Pictures of Shirdi Sai Trust Complex Bhumi Pooja of Sai Ashram Project Pictures of Shirdi Sai Dwarakamayee Pictures of Shirdi Sai Gurusthan Pictures of Shirdi Sai Shri Saibaba Pictures of Shirdi Sai Shri Mahameru Pictures of Shirdi Sai Meditation Hall Pictures of Shirdi Sai Trust Office Pictures of Shirdi Sai Raja Ganapathy Sanctum